தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி வீட்டை அபகரித்த பாஜக மாவட்ட செயலாளர்.. தீக்குளிக்க முயன்ற குடும்பம்: காப்பாற்றிய போலிஸ்!

பா.ஜ.க மாவட்ட செயலாளர் வீட்டை அபகரித்ததால் மாற்றுத்திறனாளி குடும்பம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி வீட்டை அபகரித்த பாஜக மாவட்ட செயலாளர்.. தீக்குளிக்க முயன்ற குடும்பம்: காப்பாற்றிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் சிவபாலமுருகன். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினர் வீடு கட்டுவதற்கும், குழந்தைகளின் படிப்புச் செலவிற்கும் திருப்பூர் பா.ஜ.க தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜா என்பவரிடம் ரூ.24 லட்சம் பணம் வாங்கியுள்ளனர். இதற்கு லட்சக் கணக்கில் ராஜா வட்டி கேட்டார்.

இந்தப் பணத்தை இவர்களால் கட்ட முடியவில்லை. இதையடுத்து பணத்தைக் கட்ட வங்கியில் கடன் வாங்கி தருவதாகக் கூறி தம்பதிகளுக்கு சொந்தமாக, பழனியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை ராஜா வாங்கிக் கொண்டுள்ளார். ஆனால் வங்கியில் சொன்ன படி கடன் வாங்கித் தராமல் ரூ.5 கோடி மதிப்பிலான அந்த நிலத்தை அவர் அபகரித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தம்பதிகள் கேட்டதற்கு தரக்குறைவாக பேசி அவர்களை மிரட்டியுள்ளார்.

மாற்றுத்திறனாளி வீட்டை அபகரித்த பாஜக மாவட்ட செயலாளர்.. தீக்குளிக்க முயன்ற குடும்பம்: காப்பாற்றிய போலிஸ்!
மாற்றுத்திறனாளி வீட்டை அபகரித்த பாஜக மாவட்ட செயலாளர்.. தீக்குளிக்க முயன்ற குடும்பம்: காப்பாற்றிய போலிஸ்!

அதேபோல், மாற்றுத்திறனாளி மாசிலாமணி என்பவர் அவரது தாயாரின் மருத்துவச் செலவிற்காக ரூ.5 லட்சம் ராஜாவிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி கேட்டு தொந்தரவு செய்தார்.

பின்னர் ஆச்சியூரில் அவருக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டு ஆவணங்களை கடன் வாங்கி தருவதாக கூறி அவரின் வீட்டையும் ராஜா அபகரித்துள்ளார். இது குறித்து கேட்டபோது 'நான் பா.ஜ.க கட்சியில் இருக்கிறேன் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது' என இரண்டு குடும்பத்தையும் ராஜா மிரட்டியுள்ளார்.

இதனால் வேதனையடைந்த சிவபாலமுருகன், அவரது மனைவி சித்ரா மற்றும் ஆச்சியூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாசிலாமணி ஆகிய மூன்று பேரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

அப்போது அங்குப் பாதுகாப்பிலிருந்து போலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க மாவட்ட செயலாளரால் ஒரு குடும்பமே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories