தமிழ்நாடு

தொடர்ந்து 14வது முறை.. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தி.மு.க கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேற்றபட்டது.

தொடர்ந்து 14வது முறை.. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தி.மு.க கொண்டுவந்த  தீர்மானம் நிறைவேற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்று நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார் ஆகியோரும் சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தனர்.

தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, 13 முறை மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சட்டப்பேரவையில் அரசின் தீர்மானமாக நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை மாநில அந்தஸ்து வழங்கப்பட்வில்லை.

தொடர்ந்து 14வது முறை.. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தி.மு.க கொண்டுவந்த  தீர்மானம் நிறைவேற்றம்!

மாநில அந்தஸ்து இல்லாததால்மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இறுதி முடிவை தலைமைச் செயலர் மற்றும் ஆளுநர் எடுக்கும் நிலையில் உள்ளது. ஆளுநருக்கு உண்மையான விசுவாசிகளாக அதிகாரிகள் உள்ளனர்.

புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கலாம் என சுஸ்மா சுவராஜ் தலையிலான குழுவினர் புதுச்சேரியை ஆய்வு செய்த பின்னர் தெரிவித்துள்ளனர். மாநில அந்தஸ்து கிடைத்தால் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான முடிவுகள் விரைவில் எடுக்க முடியும். மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்து சென்று ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்” என்றார்.

தொடர்ந்து 14வது முறை.. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தி.மு.க கொண்டுவந்த  தீர்மானம் நிறைவேற்றம்!

இதனை தொடர்ந்து தி.மு.க கொண்டுவந்த மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானத்திற்கு ஆளும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து பேசினர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரியில் மக்கள் நலனை செயல்படுத்துவதில் சங்கடம் இருக்கின்றது.

இதற்கு மாநில அந்தஸ்துதான் ஒரே தீர்வு. இந்த பேரவையில் மாநில அந்தஸ்து வலியுறுத்தி அனைத்து கட்சி ஒருமனதாக பேசியுள்ளதால் இதை அரசின் தீர்மானமாக கொண்டுவர வேண்டும் தெரிவித்தார். இதன் பிறகு மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானத்திற்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததால், திமுக கொண்டு வந்த மாநில அந்தஸ்து தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்கோரி, ஒன்றிய அரசை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories