தமிழ்நாடு

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!

அமெரிக்காவில் தற்கொலை செய்துக்கொண்ட தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியின் குழந்தையை மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் நேரடியாக களமிறங்கியுள்ளது அயலகத் தமிழர் நல வாரியம்.

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகில் உள்ள தொல் பழமை நாகரிகப் பாரம்பரியம் கொண்ட இனங்களில் தமிழினமும் ஒன்று. தொன்மையான தமிழினம் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. குறிப்பாக இன்றளவில், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

சொந்த நாட்டை பிரிந்து வணிகம் செய்வதற்காக, வாழ்வதற்காக, வேலை தேடி மற்றும் புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள் என இத்தகைய இடப்பெயர்வுகள் காலகாலமாக நடந்து வருகின்றன. அவர்களுக்கு அங்கே போதிய பாதுகாப்பை ஒன்றிய அரசாங்கம் உறுதி செய்வதாக இருந்தாலும், பல நேரங்களில் உதவிகள் கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது.

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!

குறிப்பாக உயிரிழந்தவரின் உடலைக் கொண்டுவரும் நிகழ்வு எளிதாக நடப்பதில்லை. இந்நிலையில் ஒன்றிய அரசு தனது கடமையை செய்கிறது என விட்டுவிடாமல், தங்களால் ஆன உதவிகள் மூலம் புலம்பெயர் தமிழர்களை பாதுகாக்க திமுக அரசு ஆட்சிக்கு வரும் போது தனிக்கவனம் செலுத்தும் என்பதே நிதர்சனம்.

குறிப்பாக, எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் திமுக அரசு முன்வந்தது என்பதே வரலாறு.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கலைஞர் அரசால் இயற்றப்பட்டது. “புலம்பெயர் தமிழர் நலவாரியம்" என்ற ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கலைஞர் அறிவித்தார்.

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!

அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் “புலம்பெயர் தமிழர் நலவாரியம்" கைவிடப்பட்டது. அதிமுக அரசு மீண்டும் தொடங்க முன்வரவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றி அரியணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏறினார். ஆட்சி அமைத்தபோதே, “புலம்பெயர் தமிழர் நல வாரியம்’’ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும்.

அதுமட்டுமல்லாது, 5 கோடி ரூபாய், “புலம்பெயர் தமிழர் நலநிதி’’ என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம், ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், அடையாள அட்டை என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏதோ திட்டம் அறிவித்தோம், நல வாரியம் கொண்டுவந்தோம் என்று இல்லாமல், அதற்கு தலைவர் முதல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமித்து நல வாரிய பணிகளை முடுக்கி விட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!

அந்தவகையில், புலம்பெயர் தமிழர் நல வாரியத்திற்கு தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டார். மேலும் வாரியத்தின் அரசு சாரா உறுப்பினர்களாக மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வட அமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் (எ) கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ.மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் நியமிட்டப்பட்டனர்.

இந்த நல வாரியம் அமைக்கப்பட்ட பிறகு வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்கொலை செய்துக்கொண்ட தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியின் குழந்தையை மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக நடவடிக்கையில் நேரடியாக களமிறங்கியுள்ளது அயலகத் தமிழர் நல வாரியம்.

இதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் கார்த்திகேய சிவசேனாபதி அங்குள்ள அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்களை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கார்த்திகேய சிவசேனாபதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள முகநூல் பதிவில், “அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் தாய் தந்தையை இழந்த தமிழ்நாட்டை சேர்ந்த குழந்தை (உறவினரல்லாத) அண்டை வீட்டாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் அக்குழந்தையின் குடும்ப உறவினர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தை அனுகி குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வர உதவி கோரினார்கள், இதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் உடனடியாக அக்குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்கள்.

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!

அதன் ஒரு பகுதியாக அக்குழந்தையின் குடும்ப உறவினர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அயலகத் தமிழர் நல வாரியம் செய்து வருகிறது, இதன் தொடர்ச்சியாக இன்று அமெரிக்காவின் தெற்கு பகுதியில் டெனிசி மாநிலத்தில் உள்ள மெல்பெசட் மாநகரத்தில் உள்ள அக்குழந்தையின் சிற்றன்னையும், பாட்டியும் அந்நகர தமிழ்ச் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் ஆலோசனைப்படியும், அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பாக அமெரிக்க நாட்டின் உறுப்பினர் கால்டுவெல் வேல் நம்பி அவர்களுடன் இணைந்து அக்குடும்பத்தினரை சந்தித்து, அட்லாண்டாவிலிருந்து வந்திருந்த இந்திய நாட்டு தூதரக ராஜு கந்தசாமி மற்றும்மினி நாயர் அவர்களுடன் இணைந்து ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.

அந்தக் கூட்டத்திலே டல்லாஸ் பகுதி சக்திவேல், சார்லோட்டைச் சார்ந்த ரோகிணி, ராலே பகுதி வட கரோலினா REACTION-Response Emergency Access&Care To Indian Overeas Network Team Inc லாவண்யா, மிட் சவுத் வாசுதேவன், கல்யாண், திரு. திருமகள் தியாகராஜன், திரு. ரேகா பிள்ளை, திரு கேமெலியோ ஜோன்ஸ், திரு.பிரியா நாகராஜ், திரு. ராஜி வேல்ராஜன், திரு. கே.பி ராமநாதன், திரு. விக்னேஸ்வரன் சிவசுப்ரமணியம், திரு. சூரியன் பொன்னுசாமி, திரு. செந்தில் வி சந்திரன், திரு. சங்கர் மஹாலிங்கம் மற்றும் திரு.சக்திவேல் ராம் இவர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கலந்தாய்வு கூட்டத்தில் விவாதித்தோம்.

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!

இதற்கு முன்னதாக நியூயார்க் அமெரிக்க வழக்கறிஞர் திரு.நிலா, மற்றும் திரு. பாலாஜி ஆகியோருடனும் இப்பிரச்சினையை சட்டப்படி எப்படி அணுகுவது என்று ஆலோசனை கேட்டு, அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் சேர்ந்து அக்குழந்தையை மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தேவையான சட்ட உதவி, பொருளாதார உதவி செய்வோம் என உறுதியளித்திருக்கிறோம்.

தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் குறிப்பாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் (Fetna) கூட்டமைப்பின் தலைவர் பெரு மரியாதைக்குரிய திரு. பாலா சாமிநாதன் ஆகியோருக்கும் இக்கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாகவும், அயலகத் தமிழர் நல வாரியம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!

மேலும் இதனிடையே குழந்தையை தமிழ்நாடு அழைத்து வர உதவியாக இருக்கும் வழக்கறிஞர் நிலா நடராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அவரிடம் மேற்கொண்ட ஆலோசனைக் குறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் மேற்கு பகுதியான திருப்பூரில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் நிலா நடராஜன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க நாட்டில் வாஷிங்டனில் குடியேறிய நிலா நடராஜன் அவர்களின் பெற்றோர் .உயர் கல்வி முடித்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள். அவர்களுடைய மகள் நிலா நடராஜன் நியூயார்க்கில் இருக்கக்கூடிய புரூக்ளின் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சமூகவியல் பட்டம் படித்துவிட்டு கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துவிட்டு இப்பொழுது குழந்தைகள் நலன் மற்றும் குடும்ப நல வழக்கறிஞராக நியூயார்க்கில் பணிபுரிந்து வருகிறார்.

அரசியலின் மீதும் குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் மீது பெரும் அக்கறையும் அன்பும் கொண்டவர். டென்னிசி, மெம்பிஸ், மிசிசிபி தமிழ் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்கும் சட்டப் போராட்டத்திற்கு தொடர்ந்து பல மாதங்களாக உதவியாக இருக்கக்கூடியவர். ஆதலால் இவரை சந்தித்து சட்டரீதியாக குறிப்பாக அமெரிக்காவை பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு விதமான சட்ட வேறுபாடுகள் உள்ளது (அமெரிக்கா உண்மையான கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட நாடு என்பதை நாம் பாராட்டுவோம். )

இவரை சந்தித்து அந்த குழந்தையை எப்படி அவரது குடும்பத்தினரிடம் சித்தி மற்றும் பாட்டியுடன் ஒன்று சேர்ப்பது என்பதைப் பற்றி கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சட்டரீதியாக தெரிவித்து இருக்கிறார்கள். உண்மையிலேயே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இளம் பெண், தொலைதூரத்தில் இருந்துகொண்டு சட்டப் போராட்டத்தில் தவிக்கும் குழந்தைக்காக தன்னுடைய நேரத்தையும், அறிவையும் , அன்பையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தமைக்கு தமிழ் உணர்வோடு பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறார் நிலா நடராஜன்.” என தெரிவித்திருக்கிறார்.

அதன்பின்னர் வழக்கறிஞர் தம்பதி கவிதா மற்றும் பாலாஜி ஆகியோரையும் சந்தித்து குழந்தையை மீட்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அந்த பதிவில், “திருமதி. கவிதா மற்றும் திரு. பாலாஜி அவர்கள் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்கள். குன்றக்குடிக்கு அருகே ஒரு குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக சிறு வயதில் தங்களது குடும்பங்களால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து பின் பள்ளி, கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைத்து, அக் குழந்தைகளை குடும்பத்தில் ஒருவராக தங்கள் குழந்தைகளைப் போல எண்ணி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி கல்லூரி படிப்பு, திருமணம் போன்ற அனைத்து விதமான குடும்ப கடமைகளையும் இவர்களே பொறுப்பேற்று செய்து வருகின்றனர். வருடம் ஒருமுறை அல்லது இரண்டு முறை ஒரு சுற்று பயணத்திற்கு குடும்பத்துடன் அழைத்துச் சென்று வருகின்றனர்.

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் தமிழ் குழந்தை.. நேரடியாக களத்தில் இறங்கிய கார்த்திகேய சிவசேனாபதி!

அறக்கட்டளையை நடத்தி வரும் வழக்கறிஞர் திருமதி. கவிதாவையும் வழக்கறிஞர் திரு. பாலாஜி அவர்களையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். டென்னிஸ் மாநிலம் மென்சஸ் நகரத்தில் மற்றும் மிசிசிபி மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தன் தாய் தந்தையை இழந்த குழந்தையை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர அவரின் சித்தியும், பாட்டியும் பரிதவித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் புலம் பெயர் தமிழர் நல வாரியத்தை அணுகி இருந்தார்கள். அந்த குழந்தைக்காக பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வரக்கூடிய சூழ்நிலையிலே, சட்ட சிக்கல்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க நாட்டின் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் (CPS), கவுண்டிங் கோர்ட் போன்றவற்றில் இருக்கக்கூடிய நுணுக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர்களை சந்தித்து இவர்களுடன் உரையாடியதில் பெரும் மகிழ்ச்சி. புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியத்தின் சார்பாகவும் தமிழ்நாடு அரசின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். பெரும் உதவியாக இவர்களுடைய அறிவுரையும் அனுபவங்களும் இருந்தது என்றால் அது மிகை ஆகாது ” என குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு குழந்தை என கடந்துவிடாமல், தமிழ்நாட்டில் மகள் என அக்குழந்தையை மீட்க கழகமும், கழக அரசும் இணைத்து செயல்படுவது சாதரமான விசயமல்ல. கடைக்கோடி மக்களின் வாழ்வாதரத்தையும், சமூக பாதுகாப்பையும் உறுதி செய்வதே குறிக்கோளாக கொண்டுள்ளவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை மீண்டும் நிரூப்பித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்!

Related Stories

Related Stories