தமிழ்நாடு

2 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 86% திட்டங்கள் நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் PTR பதிலுரை!

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27% திட்டங்கள்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

2 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 86% திட்டங்கள் நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் PTR பதிலுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்தநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலுரையளித்தார். அதில், "அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் மட்டுமே 3 லட்சத்து 27 ஆயிரத்து 157 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1704 அறிவிப்புகளை வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு நிதி கூட ஒதுக்கவில்லை. மேலும் 87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான 27% திட்டங்களை மட்டும்தான் அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 86% திட்டங்கள் நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் PTR பதிலுரை!

ஆனால் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஆளுநர் உரை அறிவிப்புகள் 78, முதலமைச்சர் 161 அறிவிப்புகளைத் தனியாகவும், இதர அறிவிப்புகளாக 46 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டதோடு, 110 விதியின் கீழ் 67 அறிவிப்புகளையும், மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் சென்ற போது 88 அறிவிப்புகளும், மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் 5 அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கையில் 338 அறிவிப்புகளையும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 330 அறிவிப்புகள் என மொத்தம் 3 ஆயிரத்து 537 திட்டங்கள் அறிவிக்கப்பட்டனது

இதில் 3038 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 86% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 63 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு 39 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 86% திட்டங்கள் நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் PTR பதிலுரை!

மேலும் 24 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 7 வருடத்திற்குப் பிறகு வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதிப்பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் செயல் திறனைக் காட்டுகிறது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, மேற்குவங்கம், மத்திய பிரதேஷ், கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களோடு, ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை குறைவாகவே இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories