தமிழ்நாடு

மதுரைக்கு மெட்ரோ ரயில் எதுக்கு ?.. கிண்டல் செய்வபர்களுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியுமா ?

ஒரு மெட்ரோ திட்டம் செயல்படுத்த அரசு பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்தே அறிவிப்பை வெளியிடுகிறது.

மதுரைக்கு மெட்ரோ ரயில் எதுக்கு ?.. கிண்டல் செய்வபர்களுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்குவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில், 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8,500 கோடியில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

மதுரைக்கு மெட்ரோ ரயில் எதுக்கு ?.. கிண்டல் செய்வபர்களுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியுமா ?

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு மதுரை மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வந்த நிலையில், சிலர் மதுரை மக்களுக்கு மெட்ரோ தேவையில்லை என்றும், அப்படி வந்தால் பஸ் படிக்கட்டில் நிற்பதுபோல தான் பயணம் செய்வார்கள் என்றும் கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் ஒரு மெட்ரோ திட்டம் செயல்படுத்த அரசு பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்தே அறிவிப்பை வெளியிடுகிறது.

மதுரைக்கு மெட்ரோ ரயில் எதுக்கு ?.. கிண்டல் செய்வபர்களுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியுமா ?

மெட்ரோ திட்டத்தின் பல்வேறு நிலைகள் :

,1)திட்ட சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility Study )

2)விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report)

3)மத்திய அரசு ஒப்புதல் (Govt Approval)

4)கடன் தரும் வங்கியின் ஒப்புதல் (Funding Agency Approval)

5)டெண்டர் வெளியீடு (Tendering)

6)கட்டுமானம் (Construction)

என்று பல்வேறு சவாலான நிலைகளை கொண்டது.

இதில் திட்ட சாத்திய கூறு அறிக்கை தயார் செய்யும் போது,

1) டிராபிக் / போக்குவரத்து நெரிசல் உள்ளதா ?

2) திட்டத்திற்கு செலவிடும் பணத்திற்கு உரிய பலன் கிடைக்குமா? (Cost / Benefit Ratio)

3)இன்னும் 30 வருடங்களில் எந்த விதமான வாகன நெருக்கம் இருக்கும்?

4) எந்த வழித்தடத்தில் செயல் படுத்தினால் பலன் கிடைக்கும்?

என்று பலவேறு விஷயங்களை ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயரிக்கப்படும். இந்த சத்திய கூறு அறிக்கை சரியாக இருந்தால் மட்டுமே, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும்.

மதுரைக்கு மெட்ரோ ரயில் எதுக்கு ?.. கிண்டல் செய்வபர்களுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியுமா ?

அந்தவகையில், மதுரை மெட்ரோவுக்கு சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஜனவரி மாதம் தயாரிக்கப்ட்டு, திட்டம் செயல்படுத்த சாத்தியம் இருப்பதாலேயே, தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரைக்கு மெட்ரோ ரயில் போக்குரவத்து வேண்டும் என்றும், 80 % மதுரை மக்கள் கருத்து சொல்லியுள்ளார்கள் (Refer Photo-1) . இது போக, முதலீடு செய்யும் பணத்திற்கு தகுந்த பலன்களை கொடுக்கும்.எனவே, வளர்ந்து வரும் மதுரையின் தேவையை கருத்தில் கொண்டு, வருங்கால போக்குவரத்து நெரிசலையும் கவனத்தில் கொண்டு, மதுரை மெட்ரோ திட்டத்தை அரசு செயல் படுத்துகிறது. ஏனெனில், மதுரைக்கு மெட்ரோ வேண்டும் என்பது, மதுரை மக்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories