தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அறிவிப்புகள் இதோ!

கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அறிவிப்புகள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அறிவிப்புகள் இதோ!

இதையடுத்து இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கம்பு, கேழ்வரகு நேரடியாகக் கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு. பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் 26 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 1.82 லட்சம் விவசாயிகளுக்கு 163.60 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அறிவிப்புகள் இதோ!

கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியம் வழங்க நடவடிக்கை. முதற்கட்டமாகத் தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வழங்கப்படும்.

வரும் நிதியாண்டில் 2,504 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.ரூ.82 கோடியில் முதலமைச்சரின் சிறுதானிய இயக்கம் 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். நம்மாழ்வார் பெயரிலான விருது. ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories