தமிழ்நாடு

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

“சிறுபான்மையினருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்த, ஒரு கட்சியாக இருப்பது நம்மை எதிர்த்து போட்டியிடக்கூடிய அதிமுக என்பதும் உங்களுக்குத் தெரியும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.2.2023) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அக்ரஹாரம் பகுதியில் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரை பின்வருமாறு :-

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இப்படியே பேசாமல், உங்கள் முகத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்று தோன்றுகிறது. காரணம் உங்கள் முகத்தில் தோன்றக்கூடிய எழுச்சி, உணர்ச்சி, ஆர்வம், ஆரவாரம் எல்லாம் பார்க்கும்போது, நம்முடைய வேட்பாளர் இளங்கோவன் வெற்றி, சாதாரண வெற்றி அல்ல, ஒரு மகத்தான வெற்றி என்பதை காட்டுகிறது.

தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியா அல்லது வெற்றி விழா நிகழ்ச்சியா என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு வந்துவிட்டீர்கள். கை சின்னத்திற்குதான் ஓட்டு போட வேண்டும். திமுக கூட்டணியைத்தான் வெற்றி பெற வைக்கவேண்டும்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

நம்முடைய வேட்பாளர் இளங்கோவன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்து நிற்கக்கூடிய அத்தனை பேருக்கும் டெபாசிட் போகவேண்டும் என்று அந்த உறுதியோடு வந்திருக்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நான் உங்களிடத்தில் வாக்கு கேட்பது என்பது என்னுடைய கடமை.

இது இடைத்தேர்தல், இந்த இடைத்தேர்தல் என்பது எந்த சூழ்நிலையில் வந்திருக்கிறது. அதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த இடைத்தேர்தல் என்பது ஏற்கனவே நடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் நம்முடைய அணியின் சார்பில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்ற நம்முடைய திருமகன் ஈ.வே.ரா அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். 9000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள்.

நீங்கள் எந்த நம்பிக்கையோடு அனுப்பி வைத்தீர்களோ, அந்த நம்பிக்கையோடு அவரும் சட்டமன்றத்திற்கு வந்து பணியாற்றினார். ரொம்ப அமைதியாக இருந்து ஆனால் அதே நேரத்தில் அழுத்தமாக பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி, இந்தத் தொகுதி மக்களுடைய குறைகள் என்ன?  தொகுதி மக்களுக்கு என்ன பிரச்சனை? என்பதை சட்டமன்றத்தில் எடுத்துப் பேசுவது மட்டுமல்ல, முதலமைச்சராக இருக்கக்கூடிய என்னையும் அடிக்கடி அவர் வந்து சந்திப்பார். 

அதேபோல, அமைச்சர் பெருமக்களையும் சந்தித்து, என்னென்ன குறைகள், என்னென்ன பிரச்சனைகள் செய்து கொடுக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டு அதற்காக நிதிகள் எல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகளை அவர் செய்தார். அந்தப் பணிகள் எல்லாம் செய்து கொண்டிருந்த நேரத்தில், அவர் திடீரென்று, 46 வயதுடைய ஒரு இளைஞன் நம்முடைய திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

அவரைப் பெற்றெடுத்த அவருடைய தந்தை இன்றைக்கு வேட்பாளராக இருக்கக்கூடிய நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்திற்கும் மட்டுமல்ல, எங்களுக்கு மட்டுமல்ல, இந்த தொகுதிக்கே ஒரு இழப்பாக அமைந்திருக்கிறது. அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தீர்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே ஒரு இடைத் தேர்தலை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக இன்றைக்கு நிறுத்தப்பட்டிருக்கக்கூடியவர் நம்முடைய காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய முன்னோடிகளில் ஒருவராக, தலைவர்களில் ஒருவராக இருந்து, மிகப் பெரிய ஒரு அரசியல் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள்தான். நம்முடைய வேட்பாளர் இளங்கோவன் அவர்கள் பற்றி அதிகமாக உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், பெரியாருடைய அந்த குடும்ப வாரிசுகளில் ஒருவராக இருக்கக்கூடியவர். தந்தை பெரியாருடைய அண்ணன் மகன் ஈ.வி.கே.சம்பத் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களால், சொல்லின் செல்வர் என்று பாராட்டப்பெற்றவர். நாடாளுமன்றத்திற்கு சென்று அழுத்தமாக, ஆணித்தரமாக பேசியவர்.

அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்று சொன்னால், இலட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். அந்த அளவுக்கு பேசக்கூடியவர். சொல்லின் செல்வர் என்று ஒரு மிகப்பெரிய பட்டத்தைப் பெற்று தமிழ்நாட்டிலே வலம் வந்தவர். அவருடைய அருமை மகன்தான் நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். சம்பத் மைந்தனுக்கு கலைஞர் மைந்தன் ஓட்டு கேட்டு வந்திருக்கிறான்.

இதுதான் வரலாறு, இதுதான் பாரம்பரியம். அப்படிப்பட்ட பெரியார் குடும்பத்தில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய மதிப்பிற்குரிய வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் எல்லாம் வெற்றி பெற வைக்கவேண்டும் என்று கேட்பதற்காக உங்களை தேடி நாடி வந்திருக்கிறோம். இந்த பகுதிகளில் இருக்கக்கூடிய உங்களை எல்லாம் நான் உற்றுப் பார்க்கிறேன்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

இந்தப் பகுதி என்பது சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாக கொண்டிருக்கிறது. அதேபோல அருந்ததிய சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய மக்கள் வாழக்கூடிய பகுதியாகவும் இந்த பகுதி அமைந்திருக்கிறது. அந்த சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய மக்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்கள் கலைஞருக்கு பக்கபலமாக, கழகத்திற்கு பக்கபலமாக இருக்கக்கூடியவர்கள் நீங்கள்.

அதேபோல அருந்ததிய சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் அதே உணர்வோடு இருக்கக்கூடியவர்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக சொல்லவேண்டுமென்று சொன்னால், சிறுபான்மை மக்களுடைய காவல் அரணாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறபோதெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

இப்போதும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் சிறுபான்மையினருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்த, ஒரு கட்சியாக இருப்பது நம்மை எதிர்த்து போட்டியிடக்கூடிய அதிமுக என்பதும் உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு தேர்தல் வந்த காரணத்தினால் சிறுபான்மை மக்களுக்கு நாங்கள்தான் செய்தோம், செய்தோம் என்று ஒரு பொய்ப்பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் நிச்சயமாக சொல்கிறோம், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் நிச்சயம் இதை நம்ப மாட்டார்கள் என்று மிகத் தெளிவாக எல்லோருக்கும் தெரியும். வேறு ஒன்றும் வேண்டாம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மையினருடைய மனதில் அச்சத்தை ஏற்படுத்திய ஆட்சி எது? ஒன்றியத்திலே இருக்கக்கூடிய - மோடி தலைமையில் இருக்கக்கூடிய பாரதீய ஜனதா கட்சியினுடைய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். அந்த சட்டத்தை கொண்டு வந்தபோது, அதை ஆதரித்து ஓட்டுப்போட்ட கட்சி எது என்று கேட்டால், இன்றைக்கு நம்மை எதிர்த்து நிற்கக்கூடிய அதிமுக கட்சிதான்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

மாநிலங்களவையில், CAA-வுக்கு ஆதரவாக அதிமுகவைச் சார்ந்த 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரித்து ஓட்டு போட்டார்கள். ஓட்டு போடாமல் தடுத்திருந்தால், அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. ஆனால் அதை ஆதரித்து, ஓட்டு போட்ட காரணத்தினால்தான் மாநிலங்களவையில் சட்டம் நிறைவேறியது. அந்த சட்டத்தை எதிர்த்து ஓட்டு போட்டது திமுக.

நீங்கள் மறந்துவிடக்கூடாது. திமுக உறுப்பினர்கள் அத்தனை பேரும், நம்முடைய கூட்டணியைச் சார்ந்திருக்கக்கூடிய அத்தனை பேரும், அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதை எதிர்த்து ஓட்டு போட்டார்கள். அதிமுக உறுப்பினர்கள் மட்டும் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் அந்த சட்டம் நிறைவேறியிருக்காது, அது தோற்றுப் போயிருக்கும்.

எனவே, அந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்ட அதிமுக-வுக்கு நீங்கள் பாடம் புகட்ட போகிறீர்களா? இல்லையா? அப்படி பாடம் புகட்ட வேண்டும் என்று சொன்னால் கை சின்னத்திற்குத்தான் ஓட்டு போடவேண்டும். (ஆமாம் என்று மக்கள் சொல்கிறார்கள்) இளங்கோவன் அவர்களைத்தான் வெற்றி பெற வைக்க வேண்டும் (ஆமாம் என்று மக்கள் சொல்கிறார்கள்). முடிவெடுத்து விட்டீர்களா? (ஆமாம் என்று மக்கள் சொல்கிறார்கள்) நிச்சயமாக….. உறுதியாக…. நம்பலாமா? நன்றி, நன்றி. 

ஆகவே, அந்த உணர்வோடு நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அல்லது நமது கூட்டணிக் கட்சியின் சார்பில், தமிழ்நாட்டு மக்களிடத்தில் சென்று நேரடியாகவாகவே நாங்கள் கையெழுத்து வாங்கினோம். அந்த கையெழுத்து வாங்கி அதை குடியரசுத் தலைவரிடத்தில் கொண்டு சென்று ஒப்படைத்திருக்கிறோம்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

அதையெல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆகவே, உங்களுக்காக, ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, உங்களுக்காக பாடுபடக்கூடிய ஒரு பேரியக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.  இந்த வட்டாரத்தில், தோல் பதனிடும் தொழில் அதிகமாக ஈடுபடக்கூடிய மக்கள் இந்த பகுதியில் அதிகமாக இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கியமாக தோல்பதனிடும் மையங்களில் ஈரோடு ஒரு முக்கியமான பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. அதனால்தான் காலணி உற்பத்தியில் தமிழ்நாடு இன்றைக்கு முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிகளவு காலணிகள் தோல் மற்றும் தோல் உற்பத்தி மையங்கள் அமைந்துள்ள மாநிலமாக நம்முடைய தமிழ் நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. 

2025-ஆம் ஆண்டிற்குள் காலணி மற்றும் தோல் பொருள் உற்பத்தியில் 20000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது மற்றும் இரண்டு இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது நோக்கமாக கொண்டு இன்றைக்கு தமிழ்நாடு அரசு கொள்கை வகுத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

அதேபோல, அருந்ததியினருடைய நலன் கருதி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, கலைஞர் தலைமையில் நடைபெற்றபோது, 2009-ஆம் ஆண்டு அருந்ததியினருக்கு தனியாக 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டுமென்று கலைஞர் முடிவு செய்தார். அதை சட்டமன்றத்தில் மசோதாவாக கொண்டு வந்து நிறைவேற்றப்படும் சூழ்நிலையில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு உடல் நலிவு ஏற்பட்டு முதுகில் ஒரு சிறிய அறுவை சிகிச்சையை செய்து விட்டு அவரால் சிறிது காலம் எந்த பணியும் செய்ய முடியாத நிலை இருந்தது.

நடக்க முடியவில்லை. ஓய்வு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு, இராமச்சந்திரா மருத்துவமனையில் தலைவர் கலைஞர் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். ஆனால் சட்டமன்றத்தில் அந்த மசோதா வரப்போகிறது. கலைஞர் அவர்கள் அந்த மசோதாவிற்காக சட்டமன்றத்திற்கு வருவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். மருத்துவர்கள் தடுத்துவிட்டார்கள் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

அதனால் அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த என்னை அழைத்து என்னால் சட்டமன்றத்திற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இன்றைக்கு அருந்ததியினருக்காக 3 சதவிகித இடஒதுக்கீடு சட்டமசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். என் சார்பில் நீதான் போய் நிறைவேற்ற வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்கள்.

தலைவர் கலைஞர் அவர்களின் உத்தரவிற்கிணங்க நான்தான் சட்டமன்றத்தில் ஏகமனதாக அந்த தீர்மானத்தை நிறைவேற்றினேன். அருந்ததியினருக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைப்பதற்கு தலைவர் கலைஞர்தான் காரணமாக இருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு, சட்டப்பேரவையில் மசோதாவை பேசுவதற்காக வாய்ப்பு கிடைத்தற்காக நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். 

அதனால் இன்றைக்கு அருந்ததியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அது 3 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்த காரணத்தினால்தான். இந்த நிலையில்தான் நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். சிறுபான்மையின சமுதாயமாக இருந்தாலும் சரி, அருந்ததியின சமுதாயமாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக இருந்தாலும் சரி, தாழ்த்தப்பட்ட சமுதாயமாக இருந்தாலும் சரி, அவர்களுக்காக குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்காக திட்டங்களை படைக்கக்கூடிய ஆட்சிதான், திமுக ஆட்சி. 

அப்படிப்பட்ட திமுக ஆட்சிக்கு வலுசேர்க்க வேண்டும் என்றால், இந்த இடைத்தேர்தலைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். இடைத்தேர்தல் என்பது ஆட்சியை எடை போடக்கூடிய தேர்தல்.   அதிமுக ஆட்சி இருந்ததே, பத்து வருடம் ஆட்சியில் இருந்தார்களே, ஆட்சியில் இருந்தபோது தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினார்களா? நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்களா? இல்லையே! அவர்கள் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் பலாத்காரமும், கொள்ளையடிக்கக்கூடிய ஆட்சியாகத்தான் நடந்து கொண்டு இருந்தது. 

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

தூத்துக்குடியில் மக்கள் துப்பாக்சிச் சூட்டில் பலியான கொடுமை நடந்தது. உயர்பதவியில் இருக்கக்கூடிய டிஜிபி-யே குட்கா வழக்கில் அகப்பட்டு இன்றைக்கு சிபிஐ விசாரிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. எல்லாவற்றிலும் கொள்ளையடித்தார்கள். 

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அவரால் வளர்க்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள், அம்மையார் அவர்கள் உடல் நலிவுற்று மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தபோது, அவரால் வளர்க்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள் உண்மை செய்தியை நாட்டு மக்களுக்கு சொன்னார்களா. இல்லையே.

ஜெயலலிதா அவர்கள் நமக்கு எதிரிதான். ஆனால் நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்கள். அவர் உடல் நலிவுற்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்கக்கூடிய செய்தியைகூட மூடி மறைத்தார்கள். சில அமைச்சர்கள் வந்து வெளியே என்ன சொன்னார்கள், அம்மா சாப்பிட்டார்கள், அம்மா ஜூஸ் குடித்தார்கள், அம்மா டிவி பார்த்தார்கள், இப்படித்தானே சொன்னார்கள். 

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, மறைந்து போனார். அவர் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அரசின் சார்பில் அதன் தொடர்புடைய அமைச்சர் அவர்கள் காலையிலும், மாலையிலும் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக செய்திகளை சொன்னர்கள்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

முதலமைச்சர் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை சொல்லியாக வேண்டும். அதுதான் மரபு. எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அதுதான் நடந்தது. ஆனால் முதலமைச்சரான அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செய்தியைகூட மூடி மறைத்த கொடுமைக்காரர்கள் இவர்கள்.

அவர் எப்படி இறந்தார் என்பதையே – தி.மு.க.காரர்கள் சொல்லவில்லை, காங்கிரஸ்காரர்கள் சொல்லவில்லை - அதிமுக கட்சியின் துணை முதலமைச்சராக இருந்த
ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் தர்ம யுத்தமே நடத்தினாரே. அம்மையார் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினாரே.

அம்மையார் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருக்கிறது என்று யார் சொன்னார்கள், நாங்களா சொன்னோம், அவர்கள்தான் சொன்னார்கள். அதற்கு பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணை கமிஷன் நடைபெற்றது. அந்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆனது ஏதாவது உண்மை வெளியே வந்ததா. அந்த கமிஷன் என்ன விசாரித்தது என்ற விவரங்கள் வந்ததா, எதுவும் வரவில்லையே. 

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் நிலை என்ன என்பதை மக்களுக்கு விளக்கி இருக்கிறோம். அதேபோல அம்மையார் ஜெயலலிதா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொடநாட்டில் ஓய்விற்காக அடிக்கடி செல்வார்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது கொடநாடு பங்களாவில் நடந்த கொலையும், கொள்ளை பற்றிய செய்திகள் என்னவாயிற்று.

அதைப்பற்றி விசாரணை வேண்டும் என்று சட்டமன்றத்தில் பலமுறை கேட்டோம். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதைப்பற்றி கவலைப்படவில்லை. அதற்குப்பிறகு நீதிமன்றமே தலையிட்டு விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகுதான் அது வேகம் எடுத்திருக்கிறது. தங்களை வளர்த்த, ஆளாக்கிய, தலைவராக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதாவின் வீட்டிலேயே கொள்ளையடித்தவர்கள் அவர்கள்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

அந்த கொடநாட்டிலேயே கொள்ளையடித்தவர்கள், கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விவரம் எல்லாம் வெளியே வரப்போகிறது. அதற்கு யார் காரணமாக இருந்தாலும், உறுதியாக சொல்கிறேன் அவர்கள் அத்தனை பேரையும் சிறையில் அடைப்போம். இவ்வளவு அக்கிரமத்தை செய்துவிட்டு எவ்வளவு தையரியமாக சுதந்திரமாக நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறீர்கள். அந்த அம்மா பெயரை சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். 

இந்த நிலையில், நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை சொன்னதோ, அந்த உறுதிமொழிகள் அனைத்தையும் நாங்கள் 100 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. 85 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.

இரண்டு ஆண்டுகளில் என்னென்ன செய்ய முடியுமோ, அதைவிட அதிகமாக செய்திருக்கிறோம். நிதிபற்றாக்குறை, கஜானாவையே காலிசெய்து போய்விட்டீர்களே, கொள்ளையடித்து போய்வீட்டீர்களே, இந்த சூழ்நிலையிலும் சொன்ன திட்டடங்களை மட்டுமல்ல, சொல்லாத திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றவில்லையா? 

இந்த இலட்சணத்தில் எதிர்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன சொல்லிவிட்டு போகிறார் என்றால், திமுக ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார். நீங்கள் எதை எதை செய்யவில்லையோ, அத்தனையும் செய்து முடித்திருக்கிற ஆட்சிதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக ஆட்சி. 

கலைஞர் அவர்கள், சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று சொன்னார். ஆனால் கலைஞரின் மகனாகிய நான் சொல்கிறேன், சொன்னதை மட்டும் அல்ல, செய்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம். சொன்னதை செய்வதுதான் கலைஞர் பாலிசி, சொல்லாததையும் செய்வதுதான் ஸ்டாலின் பாலிசி. 

ஒரே ஒரு திட்டம் பாக்கி இருக்கிறது. ரூ.1000 பெண்களுக்கான உரிமைத் தொகை. திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கமாட்டோம். ஐந்து ஆண்டுகள் எங்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் ஐந்து ஆண்டுகள் எடுக்க மாட்டோம். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கிறமோ இல்லையா என்று பாருங்கள்.

“இன்னும் 3 ஆண்டுக்குள் முடிக்கிறமோ இல்லையா என பாருங்கள்” : தேர்தல் பரப்புரையில் சவால் விட்ட முதலமைச்சர் !

சொல்வது யாரு, சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மார்ச் மாதம் பட்ஜெட்டில் வரப்போகிறது, பாருங்கள். பட்ஜெட் அன்று தேதி அறிவிக்கிறமோ இல்லையா என்று பாருங்கள். 

எந்த திட்டங்களாக இருந்தாலும், அதை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு இருக்கக்கூடிய ஆட்சியாக நம்முடைய ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடனே இதே ஈரோடு மாநகராட்சிக்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல திட்டங்களுக்கான பணிகள் எல்லாம் இங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது. 

மேலும், 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்றுவதற்கான செயல்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் திடீரென்று வந்துவிட்ட காரணத்தினால் அந்தப் பணிகளை வேகப்படுத்த முடியவில்லை, தேர்தல் விதிமுறைப்படி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் முடிந்த கையோடு அந்தப் பணிகள் எல்லாம், மாநகராட்சி யார் கையில் இருக்கிறது தெரியுமா, நம்முடைய நேரு அவர்கள் கையில் இருக்கிறது.

அவர் எவ்வளவு வேகமாக இருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதனால் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.  தேர்தல் முடிந்த பிறகு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு வரும் 300 கோடி ரூபாய் பணிகளாக இருந்தாலும் சரி, புதிதாக 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளாக இருந்தாலும் சரி, அவைகள் எல்லாம் உடனடியாக விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி.

உங்களையெல்லாம் மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தந்தை பெரியார் பிறந்த மண் இந்த மண். அறிஞர் அண்ணா வாழ்ந்த மண் இந்த மண். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய குருகுலம் இந்த மண். அப்படிப்பட்ட சிறப்புக்குரிய மண் இந்த மண்.

இந்த மண்ணிற்கு நீங்களெல்லாம் பெருமை தேடித் தர தந்தை பெரியாருடைய குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரித்து மிகப் பெரிய வெற்றியைத் தேடி தர வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories