தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் படிக்கக் காரணமே கலைஞரின் பேனாதான்".. அமைச்சர் பொன்முடி பேச்சு!

தமிழ்நாட்டின் வரலாற்றைச் சொல்லும் கலைஞரின் பேனா என பெருமிதத்துடன் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் படிக்கக் காரணமே கலைஞரின் பேனாதான்".. அமைச்சர் பொன்முடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான கலைஞர் ஆய்வு மைய கட்டடம் புதிதாக ரூ. 2 கோடியில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, " பெரியார் பல்கலைக்கழகத்தில் 80% மகளிர் படிக்கிறார்கள் என்றால் அதற்குத் திராவிட மாடல் ஆட்சியே காரணம். இளைஞர்களுக்குத் தமிழ்மொழி உணர்வு, தமிழ்நாட்டு உணர்வு இருக்க வேண்டும். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி செல்ல மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவிகள் உயர்கல்விக்கு அதிகம் சென்றுள்ளனர்.

தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரேயொரு பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் இருந்தது. ஆனால் தற்போது அதிக எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இருப்பதற்குத் திராவிட மாடல் ஆட்சியே காரணம். ஆராய்ச்சி படிப்பில் ஆய்வு செய்யும் மாணவர்கள் பெரியார், அண்ணா மற்றும் கலைஞரின் ஆய்வுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

"தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் படிக்கக் காரணமே கலைஞரின் பேனாதான்".. அமைச்சர் பொன்முடி பேச்சு!

கலைஞர் ஆய்வு மையத்தில் 2 ஆண்டு பட்டப்படிப்பு புதிதாகத் தொடங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாகக் கலைஞர் ஆய்வு மையம் முடங்கியிருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகே ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வந்த காலம் போய் தற்போது 80 % பெண்கள் படிப்பதற்குத் திராவிட இயக்கமே காரணம்.

அம்பேத்கரின் கொள்கைகளை இந்தியாவில் தமிழகத்தில் பரப்பியவர் தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கம் மட்டுமே. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கைகளை இன்றைக்குத் திராவிட மாடல் ஆட்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு இன்றைக்குப் பிரச்சினையாக உள்ளது. அந்த பேனா இல்லையென்றால் நாம் படித்துத் தலைநிமிர்ந்து இருக்க முடியாது. நாமெல்லாம் கல்வியில் வளர்ச்சி பெற்று இருக்க அந்தப் பேனாவே காரணம். பெண்கள் அதிகம் கல்வி கற்க, அடித்தட்டு மக்களுக்கு சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தது கலைஞரின் பேனாதான்.

"தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் படிக்கக் காரணமே கலைஞரின் பேனாதான்".. அமைச்சர் பொன்முடி பேச்சு!

பெரியார் பல்கலைக்கழக மாணவிகள், பெரியார் மற்றும் கலைஞரைப் பற்றி நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயதில் தொடங்கி கடைசி வரை கலைஞரின் பேனா எழுதியதால்தான் எங்களைப் போன்றவர்கள் கல்லூரிகளில் படிக்க முடிந்தது.

மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை வைத்திருக்கிறார்கள் தமிழகத்திலும் வள்ளுவர் சிலை பாம்பன் பாலம் ஆகியவை கடலில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. துபாயில் கடலில் ஒரு நகரம் மற்றும் ஹோட்டல் இருக்கிறது. அது எல்லாம் இருக்கிற போது கலைஞரின் பேனா சிலை அமைப்பது தொடர்பாக அரசியலுக்காகச் சிலர் பேசி வருகின்றனர்.

கலைஞரின் பேனா என்பது வரலாற்றை மாற்றி அமைத்த பேனா என்ற முறையில், அந்த வரலாற்றைத் தமிழக இளைஞர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழ்நாட்டு முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories