தமிழ்நாடு

திருவண்ணாமலை ATM கொள்ளை.. முக்கிய குற்றவாளிகள் 2 பேர் சிறையில் அடைப்பு - போலிஸில் சிக்கியது எப்படி ?

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு நபர்களை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை ATM கொள்ளை.. முக்கிய குற்றவாளிகள் 2 பேர் சிறையில் அடைப்பு - போலிஸில் சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மற்றும் 1 இந்தியன் ஏ.டி.எம் என 4 ஏடிஎம்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கேஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு ஏ.டி.எம்-ல் இருந்த சுமார் 75 லட்சம் ரூபாய் பணத்தை முழுவதும் இரவோடு இரவாக கொள்ளையர்கள் கொள்ளையடித்து தலைமறைவானர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவையை ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை ATM கொள்ளை.. முக்கிய குற்றவாளிகள் 2 பேர் சிறையில் அடைப்பு - போலிஸில் சிக்கியது எப்படி ?

தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் ஆந்திரா, மும்பை, ஒடிசா போன்ற வெளிமாநிலங்களை தொடர்ந்து ஏ.டி.எம் இயந்திரத்தை கையாளக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய வட மாநில கொள்ளை கும்பல் இந்த ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட மாடல் ஏ.டி.எம் எந்திரத்தை மற்றும் ஏ.டி.எம் ஆதாரங்களை செயல் இழக்க செய்துவிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அரியானா வரை காவல்துறை தனிப்படைகள் விரைந்தனர்.

அங்கு தீவிரமாக சோதனை செய்ததில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முகமது ஆரிப் (35), மற்றும் ஆசாத் (37) என்ற 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்கள்தான் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவர்கள் என்று தெரியவந்தது.

திருவண்ணாமலை ATM கொள்ளை.. முக்கிய குற்றவாளிகள் 2 பேர் சிறையில் அடைப்பு - போலிஸில் சிக்கியது எப்படி ?

இந்நிலையில் கர்நாடகா கோலார் பகுதியில் இருந்து விமான மூலம் ஹரியானா சென்ற முக்கிய குற்றவாளிகளான முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை தனிப்படை போலிஸார் கைது செய்து நேற்று இரவு ஹரியானாவில் இருந்து விமான மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக இரண்டு குற்றவாளிகளையும் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையை முடித்துக் கொண்டு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 1 நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கவியரசன் முகமதுஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் மார்ச் மூன்றாம் தேதி வரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இருவரையும் திருவண்ணாமலை போலிஸார் வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

banner

Related Stories

Related Stories