தமிழ்நாடு

“E-library, Free Wifi.. 10 லட்சம் நூல்கள்.. பொது நூலகத்தில் Amazon Kindle” : அசத்தும் தமிழ்நாடு அரசு!

amazon kindle unlimited மூலம் பொது நூலகங்களில் உள்ள நூல்களை இணையவழியில் அனைவரும் படிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

“E-library, Free Wifi.. 10 லட்சம் நூல்கள்.. பொது நூலகத்தில் Amazon Kindle” : அசத்தும் தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளிக் கல்வித்துறையில் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் உயர் கல்விக்குச் செல்லவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில், மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து பெண்கள் கல்வியில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதேபோல் அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளி கொண்டு வரும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கலை திருவிழாவைப் பள்ளிக் கல்வித்துறை நடத்தியது. இதில் பேச்சு போட்டி முதல் கலைநிகழ்ச்சிகள் வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் திறமைகளை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தினர்.

“E-library, Free Wifi.. 10 லட்சம் நூல்கள்.. பொது நூலகத்தில் Amazon Kindle” : அசத்தும் தமிழ்நாடு அரசு!

மேலும் இதில் வெற்றி பெற்றவர்களுக்குச் சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி மாணவர்களைப் பாராட்டி கவுரவித்தார். அதேபோன்று கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுமட்டுமல்லாது பள்ளியில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் முதலமைச்சர் மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் எழுத்தாளர்களைக் கவுரவிக்கக் கூடிய அரசாகவும் இந்த திராவிட மாடல் அரசு உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்தி ஒரு அறிவு உலகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்களில் உள்ள நூல்களை இணையத்தில் படிக்கும் வகையில் amazon kindle unlimited மூலம் அனைவரும் படிக்கும் வகையில் 'மின் நூலக சேவை' என்ற புதிய திட்டம் ஒன்றைப் பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வட்டாரங்கள் தோறும் பொது நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பொது நூலகங்களை நவீனமயமாக்கும் வகையில் மின் நூலக சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச Wifi இணைய வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

“E-library, Free Wifi.. 10 லட்சம் நூல்கள்.. பொது நூலகத்தில் Amazon Kindle” : அசத்தும் தமிழ்நாடு அரசு!

இதில் குழந்தைகள், மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என அனைத்து வாசகர்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெளிவரும் நாளிதழ்களும், பருவ இதழ்களும், தேசிய களஞ்சியம், பாடப் பொருட்கள், ஒலிப்புத்தகங்கள், குழந்தைகள் இலக்கியம், அறிவுசார்ந்த தேடுபொறி, திறந்த அணுகல் ஆராய்ச்சி இதழ்கள், புத்தக மதிப்புரை, 323 தமிழ் பருவ இதழ்கள், 23 தமிழ் நாளிதழ்களும் amazon kindle unlimited மூலம் அனைவரும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மின் நூலகத்தில் கல்வி, பொருளாதாரம், வணிகம், தொழில், பயணம், சுற்றுலா என 40 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் யாருக்கு எது தேவையோ அதைப் படிக்கும் வகையில் உள்ளது. உடனுக்குடன் கிராமப்புற வாசகர்களைச் சென்றடையும் வகையிலேயே இந்த மின் நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின் நூலகத்தில் 10 லட்சம் நூல்களைக் கட்டணமின்றி படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

banner

Related Stories

Related Stories