தமிழ்நாடு

நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு

நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியில் தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியாவை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது அவரிடம் 11 முக்கிய அம்ச கோரிக்கைகளை வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சு இது குறித்து பேசினார்.

அப்போது தமிழ்நாடு சார்பாக வைக்கப்பட்ட 11 கோரிக்கைகளும், அதற்கு ஒன்றிய அமைச்சர் அளித்த பதில்களையும் விளக்கி பேசினார். அது பின்வருமாறு : -

நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு

1. முதல் கோரிக்கை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள 'நீட் தேர்வு சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் செய்வது என்கின்ற வகையில் ஒத்துழைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது குடியரசு தலைவர் அலுவலகத்தின் மூலம் உள்துறை அமைச்சகம், சுகாதாரம், ஆயுஷ் மற்றும் உயர்கல்வி ஆகிய மூன்று துறைகளின் சார்பில் பல்வேறு விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தார்கள்.

அது தொடர்பாக எற்கனவே தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அதற்கான விளக்கங்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்கின்ற விவரங்கள் சொல்லப்பட்டது. அதை மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் பொறுமையோடு கேட்டுக்கொண்டு பரிசீலனை செய்கின்றோம் என்று கூறினார்.

நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு

2. அடுத்தது 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டு சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ள மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என்று கோரிக்கை சொல்லப்பட்டது. அதற்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ரூ.1400 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது, தற்போது அது ரூ.1900 கோடி அளவிற்கு உயர்ந்திருக்கிறது, எனவே அதற்கு Consultance நியமிக்க வேண்டும், வரைபடம் தயாரிக்க வேண்டும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது, அடுத்த வாரம் அந்த பணி முடிவடையும் என்று கூறினார்.

3. அடுத்து கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதற்கு முதலில் மதுரையில் பணிகள் தொடங்கிய பிறகு அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்று கூறியுள்ளார்.

நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு

4. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், 2011 பிப்ரவரி மாதத்தில் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 1 மருத்துவக் கல்லூரி என்கின்ற ஒரு மகத்தான திட்டத்தை கொண்டுவந்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் இது சம்பந்தமாக ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கவிருக்கிறோம், நிச்சயம் அதற்கு பிறகு இதற்கு நல்ல ஒப்புதல் கிடைக்கும் என்று கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.

5. அதே போல் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 30 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது நல்ல யோசனை இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் கலந்து பேசி ஒப்புதல் வழங்குகிறோம் என்று கூறியுள்ளார்கள்.

நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு

6. உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் ஏறத்தாழ 1200க்கு மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த செய்தியை கவனப்படுத்தினோம். உக்ரைனை போலவே Syllabus கொண்ட இடங்களில் இந்த மாணவர்கள் படிக்க வைக்க கோரிக்கையினை வைத்தோம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தபட்டவர்களுடன் கலந்து பேசி எடுக்கிறோம் என்று கூறினார்கள்.

7. அதேபோல் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் தற்போது உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு மகத்தான தீர்ப்பு ஒன்றை அண்மையில் தந்து நடைமுறையில் இருந்துக் கொண்டிருக்கிறது. 50% ஒன்றிய அரசு, 50% மாநில அரசு பட்டமேற்படிப்பு இடங்களை நிரப்புவது என்பது இருந்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் ஒன்றிய அரசை பொறுத்தவரை தற்போது அந்த பட்டமேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு பொதுமக்களிடத்தில் கருத்து கேட்பு போன்ற விஷயங்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கான ஆட்சபேனையினை தெரிவித்தோம். அதுவும் நான் அலுவலர்களோடு கலந்து பேசி அதற்கான முடிவினை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு

8. கொரோனாவிற்கு பூஸ்டர் தடுப்பூசி மூக்கு வழியே மருந்து செலுத்தும் முறை நடைமுறையில் வருவதாக சொல்லப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ரூ.800 கொடுத்து போட வேண்டும் என்று அறிந்தோம். ஏற்கெனவே முதலாம் தடுப்பூசி, இரண்டாம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போன்றவை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று மூக்கு வழியே செலுத்தும் தடுப்பூசியினையும் அரசு மருத்துவ நிர்வாகத்திற்கு தரவேண்டும் என்கின்ற வகையில் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதுவும் கூட ஜனவரி மாதத்தில் தான் சீரம் கம்பெனியில் உற்பத்தி தயாராகிறது. அந்த பூஸ்டர் தடுப்பூசி வந்தவுடன் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

9. அதோடு தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி ஆதாரம் அதாவது 15வது நிதி ஆணையத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டிற்கும் திட்ட மதிப்பீடுகள் அனுப்பி பணிகள் முடிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.800 கோடி என்கின்ற அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கு ரூ.801 கோடி நிலுவை இருக்கிறது. அது குறித்து கேட்டிருக்கிறோம். அது குறித்து அவர் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தொலைபேசியில் பேசி அந்த நிதியினை விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.

நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு

10. அதேபோல் இந்த MBBS பாடப்பிரிவுகளில் சேருபவர்கள் 15% ஒன்றிய அரசினால் நிரப்பப்படும் நிலை இருக்கிறது. கடந்த ஆண்டு 10க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் போய்விட்டது. இந்த ஆண்டு 6 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. நிரப்பப்படாமல் போகின்ற அந்த இடங்கள் எங்கள் மாநில அரசிற்கே தர வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதுவும் கூட பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

11. இறுதியாக தமிழகத்திற்கு 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் காலங்களில் இன்னும் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும் என்கின்ற கோரிக்கை வைத்தோம். அதனை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

banner

Related Stories

Related Stories