தமிழ்நாடு

TTF வாசன் : நம்பர் பிளேட் இல்லாத காரில் படம் பார்க்க வந்த விவகாரம்.. காவல்துறை தரப்பில் கூறுவது என்ன ?

நம்பர் பிளேட் இல்லாத காரில் படம் பார்க்க வந்த TTF வாசன் வந்த காரை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

TTF வாசன் : நம்பர் பிளேட் இல்லாத காரில் படம் பார்க்க வந்த விவகாரம்.. காவல்துறை தரப்பில் கூறுவது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல Youtuber ஆன TTF வாசன், தனது பைக் ரேஸால் 2கே கிட்ஸ்களின் கவனத்தை ஈர்த்தார். அதே வேளையில் அவர்களை தவறான வழிக்கு இழுத்து செல்லும் நோக்கில், நீங்களும் பைக் ரேஸில் ஈடுபட வேண்டும் என்று ஊக்குவிக்கும் வகையில் அவரது நடத்தை இருந்து வருகிறது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியது, காவல்துறைக்கு மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு என்று பெயர் போன TTF வாசன், தற்போது மீண்டும் ஒரு பிரச்னையில் சிக்கியுள்ளார்.

TTF வாசன் : நம்பர் பிளேட் இல்லாத காரில் படம் பார்க்க வந்த விவகாரம்.. காவல்துறை தரப்பில் கூறுவது என்ன ?

அதாவது இன்று சென்னை தனியார் திரையரங்கில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்டத்தை காண நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்துள்ளார், TTF வாசன். இதனை கண்ட போக்குவரத்து அதிகாரிகள் காரை அலேக்காக கைப்பற்றினர். இதுகுறித்து விசாரித்த போது, இது தன்னுடைய கார் இல்லை என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார். இருப்பினும் அவரது விளக்கத்தில் காவல்துறையினருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

TTF வாசன் : நம்பர் பிளேட் இல்லாத காரில் படம் பார்க்க வந்த விவகாரம்.. காவல்துறை தரப்பில் கூறுவது என்ன ?

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் 'காலேஜ் ரோடு' என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி இன்று காலை 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. திரைப்படத்தை விளம்பரபடுத்தும் விதமாக யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் என்பவரை படக்குழுவினர் வர வைத்துள்ளனர். இதன் காரணமாக காலை 11.30 மணி அளவில் கமலா திரையரங்கிற்கு டிடிஎஃப் வாசன் XUV என்ற சொகுசு காரில் வந்து உள்ளார்.

அப்பொழுது டிடிஎஃப் வாசன் வந்த காரில் பதிவின் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. இதைக் கண்ட வடபழனி போக்குவரத்து போலீசார் டிடிஎஃப் வாசன் பயணம் செய்து வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

TTF வாசன் : நம்பர் பிளேட் இல்லாத காரில் படம் பார்க்க வந்த விவகாரம்.. காவல்துறை தரப்பில் கூறுவது என்ன ?

விசாரணையில் டிடிஎஃப் வாசன் வந்த காரை ஓட்டி வந்தவர் அவரது நண்பர் பிரவீன் குமார் (வயது 23) என்பதும், அந்த கார் பிரவீன் குமாரின் பெரியப்பா மகனான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன் (வயது 26) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இந்த சொகுசு வாகனம் கடந்த 2022 ஆண்டு ஜூலை மாதம் வாங்கப்பட்டு இதுவரை பதிவின் ஒட்டப்படாமல் டிடிஎஃப் வாசனின் நண்பன் பிரவீன் கடந்த மூன்று மாதங்களாக இந்த வாகனத்தை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

TTF வாசன் : நம்பர் பிளேட் இல்லாத காரில் படம் பார்க்க வந்த விவகாரம்.. காவல்துறை தரப்பில் கூறுவது என்ன ?

இதனை அடுத்து பதிவு எண் ஓட்டப்படாததால் டி டி எஃப் வாசன் பயணம் செய்து வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் வேறொரு வாகனம் மூலம் சென்னை வடபழனி கமலா திரையரங்கில் இருந்து புறப்பட்டார்.

பொதுவாக புதிதாக வாங்கிய கார் என்பதால் நம்பர் பிளேட் இல்லை என்றாலும் For registration என்ற பலகை வைத்திருக்க வேண்டும். அது இல்லாத காரணத்தினால் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories