தமிழ்நாடு

ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் ‘சென்னை சங்கமம்’!

நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘சென்னை சங்கமம்.. நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படவுள்ளன.

ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் ‘சென்னை சங்கமம்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பும், அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டன. 

நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘சென்னை சங்கமம்.. நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படவுள்ளன.

ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் ‘சென்னை சங்கமம்’!

இந்த விழாக்களை மிகச் சிறப்பான முறையில் நடத்த தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் மூன்று கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன. பல்வேறு பணிகளை மேற்கொள்ளுவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விழா ஏற்பாடுகள் தொய்வின்றி நடக்கும் வண்ணம் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பணிகளுக்கான கால அட்டவணை வகுக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுகின்றன. 

தகுதியும், திறமையும், விருப்பமும் உள்ள அனைத்து கலைக் குழுக்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலை நிகழ்ச்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை கலை பண்பாட்டுத் துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அரசின் செய்திக்குறிப்பு 5.12.2022 அன்று வெளியிடப்பட்டது.

ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் ‘சென்னை சங்கமம்’!

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சார்ந்த 805 கலைக்குழுக்களிமிருந்து வீடியோ பதிவுகள் பெறப்பட்டன. இந்த பெறப்பட்ட வீடியோ பதிவுகளில் இருந்து திறமையான கலைக்குழுக்களை தேர்ந்தெடுக்க மண்டல அளவில் ஏழு தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு மண்டலத்தில் உள்ள கலைக்குழுக்களின் வீடியோ பதிவுகள் மற்றொரு மண்டலத்திற்கான தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு மதிப்பிடப்பட்டன.

ஒவ்வொரு மண்டலத்திருந்தும் திறமை வாய்ந்த 15 கலைக்குழுக்கள் வீதம் 7 மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்டு, 105 வீடியோ பதிவுகள் மாநில அளவிலான தேர்வுக்குழுவிற்கு அனுப்பப்பட்டன. இவற்றில் இருந்து 50 கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை மாநகரில் 16 இடங்களில் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. இதன் மூலம், கலைக்குழுக்களை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையும், பாரபட்சமற்ற தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டது .

ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் ‘சென்னை சங்கமம்’!

‘சென்னை சங்கமம்…நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளின் தொடக்க விழா 13.01.2023 அன்று சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்கள் ஒருங்கிணைக்கின்றார். இந்த விழாவில் மிகத்திறமை வாய்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் அவர்கள் கலைக்குழுக்களோடு நடத்தும் கண்கவர் கலைவிழா அரங்கேற்றப்படும்.

அதைத் தொடர்ந்து 14.01.2023, 15.01.2023, 16.01.2023 மற்றும் 17.01.2023 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகரில் உள்ள 16 இடங்களில் (தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலிமாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, இராமகிருஷ்ணா நகர் விளையட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்) கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30க்கும் மேற்பட்ட கலைவடிவங்கள் இடம்பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் ‘சென்னை சங்கமம்’!

மேலும், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, மெல்லிசை நிகழ்ச்சிகள் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பஞ்சாப், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.   

‘சென்னை சங்கமம்…நம்ம ஊரு திருவிழா’ வின் ஒரு பகுதியாக கருத்தரங்கம், கவியரங்கம், நாடகம் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் முன்னனி இலக்கிய ஆளுமைகள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். மேலும், ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள் போன்ற கலைப்படைப்புகள் அடங்கிய கண்காட்சியும் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். மக்கள் விரும்பிய கலைப்படைப்புகளை வாங்கிச் செல்லும் வகையில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும்.      

ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் ‘சென்னை சங்கமம்’!

‘சென்னை சங்கமம்…நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கலை பண்பாட்டுத்துறையின் மண்டல தலைமையிடங்கள் அமைந்துள்ள கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட திறமை வாய்ந்த கலைக்குழுக்கள் மூலம் ‘நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தமிழ்நாட்டின் நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலை வடிவங்களை பொது மக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையேயும் கொண்டும் செல்லும் நோக்கில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் நேரலையாக ஒளிப்பரப்பப்படும்.

பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் திரளாக வருகை தந்து ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’வில் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்படும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறும், கலைஞர்களை ஊக்கப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Related Stories

Related Stories