தமிழ்நாடு

மகளை கடத்தியதாக புகார் கொடுத்த தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: விசாரணையில் வெளிவந்த உண்மை!

சென்னை அருகே தன்னை கடத்தி விட்டதாக ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு தாயிடம் மகள் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளை கடத்தியதாக புகார் கொடுத்த தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: விசாரணையில் வெளிவந்த உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த வியாசர்பாடியைச் சேர்ந்த ராணி. இவரது மகள் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை மர்ம நபர்கள் கடத்தி விட்டதாகவும் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறியபோதே இணைப்பு துண்டித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, மகள் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று வந்துள்ளது. இதையடுத்து ராணி பூந்தமல்லி போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

மகளை கடத்தியதாக புகார் கொடுத்த தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: விசாரணையில் வெளிவந்த உண்மை!

இதையடுத்து போலிஸார், ராணியின் செல்போன் அழைப்பிற்கு வந்த நம்பரை வைத்து விசாரித்த போது வண்டலூர் - மீஞ்சூர் வெளியிட்ட சாலை, மலையம் பாக்கம் அருகே ராணியின் மகள் இருப்பது தெரியவந்தது.

பிறகு அங்குச் சென்ற போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஆட்டோவில் தன்னை ஒரு வாலிபர் மற்றும் இரண்டு பெண்கள் கடத்தி சென்று, பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து அவர்கள் என்னை இங்கு இங்கு இறக்கி விட்டுச் சென்றதாகக் கூறினார்.

மகளை கடத்தியதாக புகார் கொடுத்த தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: விசாரணையில் வெளிவந்த உண்மை!

இதனைத் தொடர்ந்து போலிஸார் அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது, ராணி மகளுடன் ஒரு வாலிபர் மற்றும் இரண்டு பெண்கள் வாகனத்தில் வந்து இறங்கி, அங்கிருந்த டீ கடையில் அமர்ந்து ஜாலியாக டீ குடித்து விட்டுச் செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலிஸார் அவரிடம் விசாரணை தாயிடம் பணம் பறிப்பதற்காக மகள் நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் போலிஸார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories