தமிழ்நாடு

கணவன் இறந்த அடுத்த நாளே மனைவியும் உயிரிழப்பு.. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

திருவள்ளூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மறுநாளே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் இறந்த அடுத்த நாளே மனைவியும் உயிரிழப்பு.. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்தவர்கள் டேனியல் பாலகிருஷ்ணன் - வெண்ணிலா தம்பதியர். இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேனியல் பாலகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கணவன் இறந்த அடுத்த நாளே மனைவியும் உயிரிழப்பு.. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

இதையடுத்து டேனியல் பாலகிருஷ்ணன் உடல் நேற்று மெரட்டூர் கிராமத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வெண்ணிலா வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலும் கணவன் உடல் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories