தமிழ்நாடு

“இனி புதுக்கோட்டையில் சிறப்பு ரயில் நின்று செல்லும்” : ஒரே கடித்தில் கோரிக்கையை நிறைவேற்றிய திமுக எம்.பி!

புக்கோட்டை எம்.பி எம்.எம்.அப்துல்லாவின் தீவிர முயற்சியில் காரணமாக நாகர்கோயிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில், புதுக்கோட்டையில் நின்றுச் செல்வதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“இனி புதுக்கோட்டையில் சிறப்பு ரயில் நின்று செல்லும்” : ஒரே கடித்தில் கோரிக்கையை நிறைவேற்றிய திமுக எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கிருஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி வெளியூர்களில் தங்கி வேலைப் பார்வர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு ஏற்றார் படி, தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, பேருந்துகள் தட்டுப்பாடின்றி இயக்கப்பட்டுகிறது.

அதேபோல் தெற்கு ரயில்வே நிர்வாகமும் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோயிலில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது, நாகர்கோலில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 தாம்பரம் வந்தடையும். இடையில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை வந்தடையும்.

“இனி புதுக்கோட்டையில் சிறப்பு ரயில் நின்று செல்லும்” : ஒரே கடித்தில் கோரிக்கையை நிறைவேற்றிய திமுக எம்.பி!

இதில், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்வதற்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. புதுக்கோட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் திருச்சி செல்லவேண்டும். இத்தகைய சூழலில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் கூட நின்று செல்லமுடியாமல் இருப்பது அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த மக்கள் அதிகமானோர் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் பணியாற்றி வருவதாக அவர்களுக்கு ஏதுவாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றுச் செல்லவேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனிடையே புக்கோட்டை எம்.பி எம்.எம்.அப்துல்லாவின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து அவர், அவர் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதி, சிறப்பு ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திருந்தார். மேலும் ரயில்வே அமைச்சகத்திடம் இதுதொடர்பாகவும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

புக்கோட்டை எம்.பி எம்.எம்.அப்துல்லாவின் தீவிர முயற்சியில் காரணமாக நாகர்கோயிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில், புதுக்கோட்டையில் நின்றுச் செல்வதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக எம்.எம். அப்துல்லா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாகர்கோயிலில் இருந்து இன்று ( 26/12/22) அன்று சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் புதுக்கோட்டைக்கு நிறுத்தம் இல்லாமல் இருந்தது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வரை பேசியதில் தற்போது புதுக்கோட்டையிலும் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories