தமிழ்நாடு

‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு இதோ!

அனைத்து மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘கலைத்திருவிழா’ திட்டமும் மாணவர்கள் சமுதாயத்தை மறுமலர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக கல்வித்துறையில் சமீபகாலமாக பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபடத் தொடங்கியுள்ளன.

அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு கல்லூரிகளில் ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.

அனைத்து மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘கலைத்திருவிழா’ திட்டமும் மாணவர்கள் சமுதாயத்தை மறுமலர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பேச்சு, ஓவியம் உள்ளிட்ட கலைத்திறமைகள் கொண்ட மாணவர்கள் மாவட்ட அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும் பள்ளியில் படிக்கும் காலத்திலே இனி சூரியனாக பிரகாசிக்க முடியும்.

"மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்" என 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா குறித்து போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது. 

போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

1.01. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவிகளும் பங்கேற்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் "கலைத் திருவிழா" என்னும் பெயரில் நடைபெற உள்ளது.

1.02.கலைத்திருவிழாப் போட்டிகள் பின்வருமாறு 3 பிரிவில் (Category) நடத்தப் பெறுதல் வேண்டும்.

பிரிவு 1 : 6 முதல் 8 ஆம் வகுப்பு

பிரிவு 2 : 9 மற்றும் 10 ஆம் வகுப்பு

பிரிவு 3 : 11 மற்றும் 12 ஆம் வகுப்பு

1.03.இம்மூன்று பிரிவில் நடைபெறும் போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி, அடுத்தடுத்த நிலைகளான வட்டார, வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிலைகளில் நடைபெறும்.

1.04. பள்ளி அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் முதல் தகுதி பெறும் ஒருவர் / ஒரு குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெறுவர்.

வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இரு தகுதிகளை பெறும் தனிநபர் / குழுக்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.

மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் தகுதியை பெறும் தனிநபர் / குழு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.

1.05. ஒரு நிலையில் தேர்வு பெற்ற அணியின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்திருக்கும் EMIS Portal (மென்பொருள்)ல் உள்ள படிவத்தில் உள்ளீடு செய்து அடுத்தடுத்த நிலை போட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். இது அந்தந்த நிலைகளின் தலைமை அமைப்பாளரின் பொறுப்பாகும்.

1.06.போட்டி முடிவுகள் குறித்து அதற்கான நடுவர்களின் முடிவே இறுதியானது. பிரிவு 1 இல் நடத்தப்படும் போட்டிகள் (6 முதல் 8 ஆம் வகுப்பு வரை)

2.01. பள்ளி அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் முதல் தகுதி பெறும் தனிநபர் / குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெறுவர். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இரு தகுதிகளை பெறும் தனிநபர் / குழுக்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் தகுதியை பெறும் தனிநபர் / குழு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.

4.04. பள்ளி அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடிக்கும் ஒருவர் அல்லது ஒரு குழு என வட்டார அளவிலான போட்டியில் பங்குபெற தகுதி பெறுவர்.

4.05. ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்கு பெற முடியும்.

‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு இதோ!

பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகளை நடத்துதல் சார்ந்த விதிமுறைகள்

5.01. பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள், பள்ளிக் கல்வித்துறையின் ஆணைக்கிணங்க நடத்தப்படுதல் வேண்டும். இதில் பரவலாக அனைத்து போட்டிகளிலும் பெரும்பான்மையான மாணவர்களை ஊக்கப்படுத்தி பங்குபெறச் செய்தல் வேண்டும்.

5.02. கலைத்திருவிழா ஒரு பொது நிகழ்ச்சியாக நடத்தப்பட வேண்டும். கலை விழா நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், நிருவாகம் செய்வதற்கும் பள்ளியளவில் குழு ஒன்றினை அமைக்க வேண்டும். இக்குழுவில் ஆசிரியர், பெற்றோர், மாணவர், கலையார்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோர் இடம் பெறுவர்.

‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு இதோ!

5.03. போட்டியில் பங்குபெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை

5.04. போட்டிகளில் பிரிவின் நடுவர்களாக பணிபுரிய உரிய கலை வல்லுநர்களைக் கண்டறிந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், விழா அமைப்புக் குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியல் ஒன்று தயார் செய்து அதன் முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலரிடமிருந்து பெற வேண்டும். இந்தப் பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்படுதல் வேண்டும்.

5.05. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவனை / குழுவினை மட்டுமே வட்டார அளவிலான போட்டிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும். இப்பரிந்துரை வழிகாட்டு நெறிமுறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைய வேண்டும். மேலும் இதனை EMIS Portal மென்படிவத்தில் தான் உள்ளீடு செய்தல் வேண்டும்.

5.06. பள்ளி அளவில் நடைபெறும் பள்ளிக் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மைக்குழு, உள்ளூர் சமூகப்பிரதிநிதிகள் ஆகியோரின் முழுமையான ஈடுபாட்டையும், ஒத்துழைப்பையும் பெறுதல் மிக மிக இன்றிமையாதது.

5.07. பள்ளி அளவிலான எல்லாப் போட்டிகளும் ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு இதோ!

6.09. வட்டார அளவிலான போட்டிகள் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையில் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். முடிந்தவரை நிகழ்ச்சிகள் யாவும் பகல் நேரத்தில் நடத்துவது ஏற்புடையதாகும்.

6.10. ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுள்ள நடுவர்களின் பட்டியலில் இருந்து நடுவர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் வட்டாரக் கல்வி அலுவலருக்கு உண்டு.

6.11. ஒரு கலை இனத்தின் ஒரு பிரிவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அதே நடுவர்கள் தான் மதிப்பீடு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு பிரிவிற்கு (6 முதல் 8 வகுப்பு) ஒயிலாட்டம் என்கிற கலை இனத்தின் நடுவராக இருப்பவர்களே அக்கலை இனத்திற்கான அப்பிரிவிற்கு நடுவர்களாக இருப்பர் .

6.12. மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் கொண்டு வந்து சேர்த்தல் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு ஆகும். மாணவ - மாணவர்களின் பாதுகாப்புக்கென இருபால் ஆசிரியர்களையும் உடன் செல்ல அறிவுறுத்த வேண்டும்.

6.13. கீழ்க்காணும் விதிமுறைக்குட்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

• அடுத்த நிலையிலான போட்டிகளில் கலந்துகொள்ள தனிநபர் / குழு போட்டியென்றால் ஒரு கலை இனத்திற்கு வட்டார அளவில் முதல் இரண்டு இடங்களில் தேர்வு செய்யப்பட்ட தனிநபர் / குழுவினர் மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்.

‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு இதோ!

6.14. வழிகாட்டு நெறிமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு முறை மற்றும் அதன் கணக்கீடு ஆகியவற்றிற்கு ஏற்ப வெளிப்பாடுகள் (Performances) மதிப்பிடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுதல் வேண்டும்.

6.15. வட்டார அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த தனிநபர் / குழுவை மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பும் பொழுது வட்டார அளவிலான முழு அறிக்கை மற்றும் நிகழ்ச்சிகளின் குறுந்தகடு பதிவு ஆகியவற்றை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாநில திட்ட இயக்குநருக்கும் அனுப்புதல் வேண்டும். வெற்றி பெற்ற இருவர் / இரு குழுக்கள் பற்றிய முழுமையான விவரங்களை மாவட்ட அளவிலான போட்டி அமைப்பாளர்களுக்கு உடனடியாக அனுப்புதல் வேண்டும்.

6.16. (a) நடுவர்களின் மதிப்பீட்டுப் பட்டியலில் அடித்தல், திருத்துதல், வெள்ளை மை வைத்து அழித்தல் ஆகியன முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் திருத்தங்களுக்கு நடுவரின் முழுக் கையெழுத்து இடம்பெற வேண்டும்.

(b) நடுவர்கள் தயாரித்த மதிப்பீட்டுப் பட்டியல், தொகுப்பு மதிப்பீட்டுப் பட்டியல் மற்றும் வென்றவர்களின் பட்டியல் யாவும் மூன்று மாதக்காலத்திற்குக் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். மேற்கண்ட மதிப்பீட்டுப் பட்டியல் மேல் முறையீட்டுக்குழுவின் தலைவர் அல்லது மாநில திட்ட இயக்குநர் அவர்கள் கேட்கும் பொழுது வழங்கப்பட வேண்டும்.

6.17. வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

6.18. போட்டியின் முடிவுகளை அப்போட்டிகளின் நடுவர்களே அறிவிக்க வேண்டும், முடிவுகளை வேறு யாரும் அறிவிக்கக் கூடாது.

6.19. போட்டிகளை நடத்துவதற்கு ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். பல்வேறு குழுக்களில் இடம் பெற்ற ஆசிரியர்களைத் தவிர, பிறர் யாரும் விழா நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

6.20. பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவுச் சான்றிதழ் தலைமை அமைப்பாளரால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு இதோ!

மாவட்ட அளவிலான கலைத்திருவிழாப்போட்டிகனை நடத்தும் விதிமுறைகள்

7.1. மாவட்ட அளவிலான போட்டிகள் பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கிணங்க நடத்தி முடிக்கப்பட வேண்டும். இப்போட்டிகளை அந்த மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியில் நடத்திக் கொள்ளலாம். தனிப்போட்டி, குழுப் போட்டிக்கான பட்டியலை ஒவ்வோர் இனத்திற்கும் தனித்தனியே தயாரித்தல்.

7.2. வட்டார அளவில் பரிந்துரைக்கப்பட்ட இருவர் / இரு குழுக்கள் மட்டுமே மாவட்ட அளவில் கலந்து கொள்ளமுடியும்.

7.3. மாவட்ட அளவிலான 'விழா அமைப்புக் குழு' அமைக்கப்படலாம்.

கீழ்வருமாறு

இது பரிந்துரை மட்டுமே, மாவட்டத்தின் தேவைக்கேற்ப இக்குழுவின் கட்டமைப்பு மாறுபட்டும் அமையலாம்.

மாநில அளவில் பள்ளிக் கலைத் திருவிழாவினை நடத்துவது சார்ந்த விதி முறைகள்

8.01. பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கிணங்க மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும்.

8.02. வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் / குழு மட்டுமே மாநில அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள முடியும்.

8.03. மாநில அளவில் அமைப்பாளர் குழு ஒன்று (organizing Committee) அமைக்கப்பட வேண்டும். இக்குழுவின் கட்டமைப்பு கீழ்வருமாறும் அமையலாம். அமைப்புக்குழு (Organizing Committee)

* முதலமைச்சர்

* எதிர்க்கட்சித் தலைவர்

* கல்வி அமைச்சர்

போட்டி நடைபெறும் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் சார்ந்த மாவட்ட எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.

தலைவர் (Chairman)

மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர்

துணைத் தலைவர்

பள்ளிக் கல்வி ஆணையர்

பொது அமைப்பாளர் (General Convener)

மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பொது ஒருங்கிணைப்பாளர்கள் (General CoordinatorS)

கூடுதல் மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

தொடக்கக் கல்வி இயக்குநர்

இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

இணை ஒருங்கிணைப்பாளர்கள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர்

மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர்

இடைநிலைக் கல்வி இணை இயக்குநர் தொடக்கக் கல்வி இணை இயக்குநர்

இணை பொது அமைப்பாளர்கள்

சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

மாவட்டக் கல்வி அலுவலர்

முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

பொருளாளர் - சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கணக்காளர். உறுப்பினர்கள் (Members)

1. எல்லா கிளைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் 2. பிற துறைத் தலைவர்கள் (Directors of Different Departments) 3. போட்டி நடைபெறும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் 4. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்

‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு இதோ!

5. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்

பள்ளிக் கல்வித் துறையின் அவ்வப்போதைய ஆணைக்கிணங்க அமைப்புக்குழு, கட்டமைப்பு ஆகியவை மாற்றப்படலாம்.

8.04. மாநில அளவிலான போட்டிகளின் அனைத்துப் பொறுப்புகளும் அமைப்புக் குழுவைச் சார்ந்ததாகும். மாநிலப்போட்டிகள் சார்ந்த நிதிப் பொறுப்பும் இவ்வமைப்பையே சாரும். போட்டி நிறைவுற்ற பிறகு வரவுசெலவு கணக்கின் அறிக்கையையும், தணிக்கை அறிக்கையையும் பயனீட்டு சான்றுடன் (Utilisation Certificate) மாநில திட்ட இயக்ககத்திற்கு ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கிளைக் குழுக்களின் செயற்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் செயல்படத் தூண்டுதல் வழிகாட்டுதல் யாவும் அமைப்புக்குழுவின் கடமையாகும். 8.05. உட்குழுக்களைக் கீழ்வருமாறு அமைத்தல் வேண்டும். எல்லா உட்குழுக்களுக்கும் தலைவர் மக்கள் பிரதிநிதிகளாகவும், அமைப்பாளர்கள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களாக இருக்க வேண்டும். (இவை யாவும் பரிந்துரை மட்டுமே - இறுதியானது அல்ல)

Related Stories

Related Stories