தமிழ்நாடு

போலிஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு இது கூடாவது தெரியாது?.. டி.கே.எஸ் இளங்கோவன் சரமாரி கேள்வி!

ஒரு வேளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது அண்ணாமலைக்கு எதாவது வருத்தம் உள்ளதா? என்று தெரியவில்லை என டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

போலிஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு இது கூடாவது தெரியாது?.. டி.கே.எஸ் இளங்கோவன் சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று ஒரு தீர்மானமும், டி.பி.ஐ வளாகத்தில் இனமானப் பேராசிரியருக்குத் திருவுருவச் சிலையை நிறுவப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் மற்றொரு தீர்மானம் என இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கழக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், "இனமானப் பேராசிரியரின் நூறாண்டு ஆண்டு நிறைவு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

போலிஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு இது கூடாவது தெரியாது?.. டி.கே.எஸ் இளங்கோவன் சரமாரி கேள்வி!

அவரின் சமூக சமத்துவ கொள்கைகளைக் கொண்டு செல்லும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வட சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகப் பிரதமர் தமிழ்நாடு வந்துவிட்டு டெல்லி சென்றுவிட்டு மீண்டும் தமிழ்நாடு வந்து சென்றுவிட்டார். இப்போது வந்து அவருடைய பாதுகாப்பு சரியில்லை என்று கூறுகிறார்கள். அண்ணாமலை ஒரு போலிஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்குத் தெரியாதா பாதுகாப்பு பற்றி.

போலிஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு இது கூடாவது தெரியாது?.. டி.கே.எஸ் இளங்கோவன் சரமாரி கேள்வி!

பிரதமர் வரும் ஒருவாரத்திற்கு முன்பே டெல்லியிலிருந்து வந்து சோதனை செய்வார்கள். அப்படி என்றால் டெல்லியில் உள்ள பிரதமரின் பாதுகாப்புப் படையினர் தவறு செய்து விட்டார்கள் என்று கூறுகிறாரா?. ஒரு வேளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது இவருக்கு எதாவது வருத்தம் உள்ளதா? என்று தெரியவில்லை.

ஆன்லைன் ரம்மியால் நிறையபேர் உயிரிழந்துள்ளார்கள். ஆன்லைன் தடை மசோதா என்பது மக்களின் பிரச்சனை. இதில் ஆளுநர் காலம் கடத்தவது சரியில்லை. பா.ஜ.க கூட்டணி இல்லாத மாநிலங்களில் ஆளுநரால் அம்மாநில அரசுகள் பிரச்சனையை சந்திக்கின்றன" என தெரிவித்துள்ளார்..

banner

Related Stories

Related Stories