தமிழ்நாடு

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!

நான் மட்டுமல்ல – நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து நம்மையெல்லாம் ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் வாழ்ந்த பகுதி, அவர் கோலோச்சிய இடம், இந்த கோபாலபுரம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.11.2022) தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தம்பதிகளுக்கான திருமண விழாவை தலைமையேற்று நடத்திவைத்தார்.

பின்னார் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த, நெஞ்சார்ந்த, உளமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் வாழ்வில் எல்லா நலமும் சூழட்டும். உங்களது கனவுகள் அனைத்தும் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன். இன்றைக்கு நான் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கிறேன். உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த உயர்ந்த பொறுப்பில் உங்களால் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன்.

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!

நான் பிறந்து - வளர்ந்து - படித்து - ஆளாகிய பகுதி இந்த ஆயிரம் விளக்கு பகுதிதான். அதிலும் குறிப்பாக இந்த கோபாலபுரம் பகுதிதான். நான் மட்டுமல்ல – நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து நம்மையெல்லாம் ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் வாழ்ந்த பகுதி, அவர் கோலோச்சிய இடம், இந்த கோபாலபுரம்.

கோபாலபுரம் என்பது தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் - இன்னும் சொன்னால் இந்தியத் துணைக் கண்டத்திற்கே ஒரு தலையாய இடமாக, மறக்க முடியாத இடமாக வரலாற்றில் விளங்கிக் கொண்டிருக்கிறது. கோபாலபுரத்திற்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ குடியரசுத் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ வெளிநாட்டு தலைவர்களெல்லாம் வந்து போயிருக்கிறார்கள்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக்குரிய இந்தப் பகுதியில் உங்களுடைய திருமணம் நடைபெறுகிறது. இதைவிடப் பெருமை உங்களுக்கு வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை. அப்படிப்பட்ட பெருமையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நம்மை ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞருடைய இதயத்தில் இருக்கக்கூடிய உங்கள் அனைவருடைய திருமணம் இங்கு நடந்தேறி இருக்கிறது.

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!

உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் என்று சுயமரியாதைப் பெயர்சூட்டி வாஞ்சையோடு அழைத்தவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தைதான் தலைவர் கலைஞர் அவர்கள்.

எனக்கு மட்டுமல்ல – என் தங்கை கனிமொழிக்கு மட்டுமல்ல – கலைஞர் பெயர் சூட்டியது, உங்களுக்கும் பெயர் சூட்டியது அவர்தான். அந்த வகையில், எங்களது குடும்ப விழா, நம்முடைய குடும்ப விழா என்ற அந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் கலந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளையானது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கடமையை மிகச் சிறப்பாக ஆற்றி வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், இந்த அமைப்புக்கு சிறந்த சமூக சேவையாளர் விருதை வழங்கி ஏற்கனவே அவர் பாராட்டி இருக்கிறார்.

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!

உங்கள் அமைப்பின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழாவையும் மிகப்பெரிய அளவில் நடத்தினீர்கள். தமிழக அமைச்சரவையில் பல துறைகள் இருக்கிறது. அதில் ஒவ்வொருவருக்கும் பல துறைகளை கலைஞர் அவர்கள் ஒதுக்கினார்கள். முதலமைச்சரைப் பொறுத்தவரை, ஒரு முக்கியமான நான்கு துறைகளை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, காவல் துறை, சட்டம்-ஒழுங்கு இதுபோன்று சில முக்கியமான துறைகளை மட்டும் தான் வைத்துக்கொண்டு இருப்பார்கள்.

ஏனென்றால், எல்லா துறைகளையும் கவனிப்பதால், பல நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டும், பல வேலைகளுக்கு போக வேண்டும். ஆகவே, எல்லா துறைகளையும் பிரித்து கொடுத்து விடுவார்கள். ஆனால், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பொறுப்பிற்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகள் என்ற ஒரு தனித் துறையை உருவாக்கி, அந்தத் துறையை தன்கீழ் வைத்துக் கொண்டவர் தான் அன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தத் துறையை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரே பலமுறை சொல்லியிருக்கிறார், இது என் நெஞ்சுக்கு நெருக்கமான துறை இந்தத் துறை என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார். நமது ஆட்சியில்,

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!

* மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையிலான கருவிகள் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

* நகர பேருந்துகளில் (White Board Bus) மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் பயணம். 

* UDD Card வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு

9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

* 1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021-2022-ஆம் நிதியாண்டில் 813 கோடியே 63 இலட்ச ரூபாயும் – 2022-23 நிதியாண்டில் 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் உலக வங்கி உதவியுடன் 6 ஆண்டு காலத்திற்கு 1702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்தின் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினையும் பரிசுத் தொகையாக, பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தப்படும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நான் இப்போது சொன்னது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நமது அரசு செய்து கொடுத்திருக்கக்கூடிய, எல்லாவற்றையும் சொல்ல நேரமில்லை, ஒரு சிறு துளியைத் தான் சொல்லியிருக்கிறேன், குறிப்பிட்ட ஒன்றிரண்டைத் தான் நான் சொல்லியிருக்கிறேன்.

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் உங்களுக்காக நமது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன்.

இவை அனைத்தையும் உங்களுக்காக, ஏதோ உங்களுக்கு சலுகை என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம், உங்களுக்குத் தர வேண்டியது எங்களது கடமை, அந்த அடிப்படையில்தான் செய்து கொடுக்கிறோம். மற்ற கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவோம்.

இங்கேகூட பேசுகிற நேரத்திலே, இந்த அமைப்பின் சார்பில் முனைவர் சிம்மசந்திரன் அவர்கள் பேசுகிறபோது, எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுத்து வீட்டீர்கள், இன்னும் இரண்டு கோரிக்கைகள் இருக்கிறது என்று சொன்னார். ஒன்றிரண்டு கோரிக்கைகள் இருந்தால்தான் நமக்கு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்.

அதற்காக கோரிக்கைகளை நாங்கள் நிலுவையில் வைப்போம் என்று நினைக்காதீர்கள். இந்தக் கோரிக்கைகளையும் முழுமையாக பரிசீலித்து, விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட அமைப்பின் சார்பில் உங்களைப் போன்றர்களையும் அழைத்துப் பேசி, அதை எப்படி செய்வது, அதற்கு எப்படி நிதி ஒதுக்குவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்துவிட்டு போகக்கூடாது.

அறிவித்துவிட்டு போய் விடலாம், அதை நிறைவேற்ற வேண்டும். அதுதான், கலைஞருடைய ஆட்சி. அந்த நிலையில் இருந்து, நிச்சயம் அதையும் நிறைவேற்றித் தருவோம் என்ற அந்த உறுதியை, நம்பிக்கையை நான் இந்த நேரத்திலே எடுத்துச் சொல்லி, அதேபோல் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளையும் சமூகப் பணிக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்ட ஒரு அமைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று சொல்வார்கள். நாட்டில் எப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எப்போது ஆட்சிக்கு வந்தோமோ அப்போதிலிருந்து விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா, அந்த கொடிய நோயிலிருந்து சிறிது மீண்டு வந்தோம். வந்தவுடன், பார்த்தீர்களென்றால் மழைதான். பத்துநாள் கூட இடைவெளி இல்லை, பெய்து கொண்டேதான் இருந்தது.

வேடிக்கையாக ஒரு செய்தி சொல்கிறேன், உண்மை செய்தி சொல்கிறேன். என்னவென்றால், 1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, நான் மேயராக பொறுப்பிற்கு வந்தேன். முதன்முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான்தான் பொறுப்பிற்கு வந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும், சென்னை மாநகர மேயராக வந்தபோது, வந்தவுடன் அடுத்த நிமிடமே மழை ஆரம்பித்தது, இருபது நாட்கள் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது, எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் நாங்கள் பார்த்து சீர்படுத்திக் கொண்டிருந்தோம். அப்போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள், நானும் பார்வையிட வேண்டும், மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று சொன்னார். உடனே மாநகராட்சி வாகனத்தில் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்துக்கொண்டு, சென்னை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். காரில் போய்க் கொண்டிருக்கும்போது வேடிக்கையாக சொன்னார், ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்தால், மழை பேயராக இருக்கிறது என்று சொன்னார்.

அதுபோல, இப்போது குடிநீர் பிரச்சனையே இல்லை. அந்த அளவுக்கு மழையும் பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையை எப்படி சமாளித்துக் கொண்டிருக்கிறோம்? ஏற்கனவே கடந்த ஆண்டு மழை பெய்தபோது என்ன நிலை? அதுவும் உங்களுக்குத் தெரியும். இப்போது என்ன நிலை? நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. 80 முதல் 95 சதவீதம் தான் முடித்திருக்கிறோம், அதற்கே மக்களிடமிருந்து பாராட்டு வருகிறது.

இன்னும் பணிகள் இருக்கிறது. அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செய்து முடிப்போம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் எடுத்துச் சொல்லி, நாட்டில் இப்போது எப்படிப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்யக்கூடிய ஆட்சிதான், உங்கள் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.

“எனக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் பெயர் சூட்டியவர் கலைஞர்தான் - இது குடும்ப விழா” : முதல்வர் நெகிழ்ச்சி!

மக்களுக்கு சேவை செய்வதன் மூலமாக உடல் நலிவு ஏற்பட்டாலும். அதைப்பற்றி கவலைப்படாமல் நான் இன்றைக்கு என்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்று அண்ணா சொன்னார். நான் இப்போது சொல்கிறேன், ஏழையின் சிரிப்பிலே கலைஞரைக் காண்போம், அண்ணாவையும் காண்போம் என்ற நிலையில் நம்முடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக இருந்து வாழுங்கள்! வாழுங்கள்! வாழுங்கள்! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories