தமிழ்நாடு

“கார்டு மேல இருக்க அந்த 16 நம்பர் சொல்லுங்கோ..” : ATM Card நம்பரை கேட்ட மோசடி நபரை வறுத்தெடுத்த முதியவர்!

ஆன்லைன் மூலம் நிதி மோசடி செய்யும் கும்பலில் சேர்ந்த ஒருவர் ATM கார்டின் 16 டிஜிட்டல் நம்பரை கேட்டு போன் செய்த மோசடி நபரிடம் வேடிக்கையாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“கார்டு மேல இருக்க அந்த 16 நம்பர் சொல்லுங்கோ..” : ATM Card நம்பரை கேட்ட மோசடி நபரை வறுத்தெடுத்த முதியவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வெளியுலகம் தெரியாமலும், கல்வி அறிவு இல்லாமலும், சமூக வலைத்தளங்களில் அனுபவம் இல்லாமலும் இருக்கும் நபர்களை குறிவைத்து பண மோசடி கும்பல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோசடி செய்து வருகிறது.

தமிழக அரசின் சார்பில் காவல்துறையினர் மூலம் சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரிடம் அவரது மனைவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஏ.டி.எம் கார்டு விபரங்களை மோசடி கும்பல் கேட்டு உள்ளது.

எந்த ஒரு வங்கியிலும் ஏ.டி.எம் கார்டு இல்லாத தனது மனைவிக்கு தொடர்பு கொண்ட மோசடி நபரிடம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏ.டி.எம் கார்டில் உள்ள 16 நம்பரை கேட்டு பேசும் அவரை குழப்பி வருத்தெடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹலிபுல்லா ஆன்லைன் வாயிலாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories