தமிழ்நாடு

'மக்களை காக்கும் மகத்தான பணி'.. அடாத மழையிலும் விடாது பணியாற்றும் ஊழியர்களை பாராட்டிய முதலமைச்சர்!

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

'மக்களை காக்கும் மகத்தான பணி'.. அடாத மழையிலும் விடாது பணியாற்றும்  ஊழியர்களை பாராட்டிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வேளச்சேரி பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

'மக்களை காக்கும் மகத்தான பணி'.. அடாத மழையிலும் விடாது பணியாற்றும்  ஊழியர்களை பாராட்டிய முதலமைச்சர்!

பின்னர் அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரச மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே!

சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே! அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது' என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories