தமிழ்நாடு

“குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் - மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்” : குவியும் பாராட்டு !

குப்பை வண்டியில் குப்பைகளுடன் கொட்டப்பட்ட வைரக்கம்பலை மீட்டுக் கொடுத்த குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

“குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் - மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்” : குவியும் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் பலமனேரி சாலையில் சேர்ந்தவர் கல்பனா. இவர் தையல் வேலை செய்து வருகிறார். இவர் சிறுக சிறுக சேகரித்த பணத்தில் தனது மவளுக்காக 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைரக்கம்மலை வாங்கி தீபாவளிக்கு நோன்புக்கு பூஜை செய்வதற்காக சாமி படத்தின் முன் வைத்துள்ளார்.

இன்று காலை பழைய பூக்களுடன் சேர்ந்து வைரல் கமலையும் அவரது மகள் குப்பையில் கொட்டியுள்ளார். இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த குப்பையை பெற்றுச் சென்றுள்ளனர்.

“குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் - மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்” : குவியும் பாராட்டு !

இதனிடையே சாமி அறையில் சென்று பார்த்த கல்பனா, வைரக்கம்மல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது மகளிடம் கேட்ட பொழுது, அவர் தற்போது தான் வீட்டில் இருந்த குப்பையை நகராட்சி குப்பை வண்டியில் கொட்டியதாக தெரிவித்தார்.

உடனடியாக நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜனை செல்போனில் தொடர்பு கொண்ட கல்பனா, நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் நகராட்சி பணியாளர்களுக்கு தொலைபேசியில் அழைத்து இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

“குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் - மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்” : குவியும் பாராட்டு !

மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வண்டியில் சோதனை செய்த போது வண்டியில் குப்பைகளுக்கு நடுவே இருந்த வைர கம்மலை மீட்டு குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் இடம் வழங்கினார்கள். நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் வைரக்கம்மலை கல்பனாவிடம் வழங்கினார். குப்பை வண்டியில் குப்பைகளுடன் கொட்டப்பட்ட வைரக்கம்மல் மீட்ட சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நகராட்சி பணியாளர்களுடன் பேசி வைரக்கம்பலை மீட்டுக் கொடுத்த குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் தான் தமிழகத்தில் தூய்மையான நகராட்சி என்று இரண்டாம் இடம் பிடித்து குடியாத்தம் நகராட்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சான்றிதழ் நினைவு பரிசையும் பெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

banner

Related Stories

Related Stories