தமிழ்நாடு

“ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் தயாரித்த கல்லூரி மாணவன் - இறுதியில் நடந்த சோகம்” : பகீர் சம்பவம்!

ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் வாங்கி, தனியார் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் தயாரித்த கல்லூரி மாணவன் - இறுதியில் நடந்த சோகம்” : பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட , ஜோசப் ஜேம்ஸ் என்பவரின் மகன் நிகில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

இவர்களுடைய குடும்பம் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மும்பையில், குடியேறி நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். நிகில் பொத்தேரியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில், அவ தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் அறையில் ஏற்கனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று வைத்திருந்த சோடியம் சல்பேட் என்ற விஷத்தன்மை உடைய பொருளை, தண்ணீரில் கலந்து குடித்துள்ளார்.

“ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் தயாரித்த கல்லூரி மாணவன் - இறுதியில் நடந்த சோகம்” : பகீர் சம்பவம்!

சிறிது நேரம் கழித்து அதே அபார்ட்மெண்டில் மற்றொரு அறையில் வசித்து வரும், தனது நண்பரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆதித்யா சவுத்ரி என்பவருக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக தகவல் அளித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து ஆதித்யா சவுத்ரி உடனடியாக அவருடைய பிளாட்டிற்கு சென்று பார்த்த பொழுது நிகில் பாதி மயக்க நிலையில் கட்டிலில் இருந்துள்ளார். ஆதித்யா மூலம் நிகில் தனது பெற்றோருக்கு போன் செய்து நடந்த விவரத்தை சொன்னவுடன் அப்பொழுது ஆதித்யா சோடா உப்பு கலந்த நிகிலுக்கு அளித்துள்ளார். அதன் பிறகு அறையில் இருந்த மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

அதன் பிறகு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது சிறிது நேரத்திலேயே நிகில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனை இதுகுறித்து மும்பையில் உள்ள மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளது. இதுகுறித்து மறைமலைநக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories