தமிழ்நாடு

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர் - குவியும் பாராட்டு!

சென்னை தேனாம்பேட்டையில் விபத்தில் சிக்கிய நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்துள்ளார். விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர் - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று (21.10.2022) சென்னை, அண்ணாசாலை, டி.எம்.எஸ். மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாரதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவ்வழியே தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி, இறங்கி சென்று, காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அருள்ராஜ் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தினார். 

banner

Related Stories

Related Stories