தமிழ்நாடு

“பணத்தை கம்மி பண்ண முடியாது”: லஞ்சம் வாங்கிய அதிமுக நிர்வாகி கைது - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்!

கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய கோவை பிளிச்சி பஞ்சாயத்து அதிமுக தலைவர் சாவித்திரி மற்றும் அவரது கணவர் ராஜன் ஆகியோரை கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து கைது செய்தனர்.

“பணத்தை கம்மி பண்ண முடியாது”: லஞ்சம் வாங்கிய அதிமுக நிர்வாகி கைது - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்த சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது மனைவி பூர்ணிமா பெயரில், வேலன் நகரில் வாங்கிய இரண்டு வீட்டு மனைகளின் கட்டிட வரைபட அனுமதிக்காக கடந்த 5ம் தேதி பிளிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 7ம் தேதி பிளிச்சி பஞ்சாயத்து அலுவலகம் சென்று இரு மனைகளுக்கும் சேர்த்து அரசு கட்டணமாக 18,640 மற்றும் பிளான் அப்ரூவல் கட்டணமாக 20,012 ரூபாய் செலுத்தியுள்ளார். பின்னர் கடந்த 30ஆம் தேதி பஞ்சாயத்து அலுவலகம் சென்று பிளான் அப்ரூவல் குறித்து பஞ்சாயத்து அ.தி.மு.க தலைவர் சாவித்திரி என்பவரை நேரில் சந்தித்து கேட்டபோது, அவர் பிளான் அப்ரூவல் அங்கிருந்த தனது கணவர் ராஜனை பார்த்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

“பணத்தை கம்மி பண்ண முடியாது”: லஞ்சம் வாங்கிய அதிமுக நிர்வாகி கைது - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்!

கார்த்திக் ராஜனிடம் கேட்டபோது ஒரு வரைபடத்திற்கு பத்தாயிரம் வீதம் இரண்டு வரைபடத்துக்கு இருபதாயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். கார்த்திக் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று தனது இயலாமையை தெரிவித்துள்ளார்.

அதற்கு ராஜன் பணத்தை கம்மி பண்ண முடியாது என்று சொல்லியுள்ளார். வங்கியில் கடன் பெறுவதற்கு பிளான் அப்ரூவல் கட்டாயம் என்பதால் கார்த்திக் கடந்த 6ம் தேதி பிளிச்சி பஞ்சாயத்துக்கு சென்று மீண்டும் பஞ்சாயத்து தலைவர் சாவித்திரியை சந்தித்து பிளான் அப்ரூவல் குறித்து கேட்டுள்ளார்.

“பணத்தை கம்மி பண்ண முடியாது”: லஞ்சம் வாங்கிய அதிமுக நிர்வாகி கைது - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்!

அப்போது பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி அவரது கணவர் ராஜன் ஏற்கனவே லஞ்சமாக கேட்ட பணம் ரூ. 20,000 கேட்டுள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்று கூறியதன் பேரில் சாவித்திரி 15 ஆயிரம் கொடுத்து விட்டு பிளான் பொருளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று காரராக சொல்லிவிட்டார்.

அப்போது பஞ்சாயத் தலைவர் சாவித்திரியுடன் இருந்த கணவர் ராஜன் கார்த்திகேயன் வெளிய அழைத்துக் கொண்டு வந்து 15 ஆயிரத்து தன்னிடம் கொடுத்துவிட்டு பிளான் அப்ளை வாங்கிக் கொள்ளுமாறு சொல்லியுள்ளார். அப்போது சரி என்று சொல்லிவிட்டு பிளான் அப்ரூவல் பெற 15,000 லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கார்த்திக் கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்துள்ளார்.

“பணத்தை கம்மி பண்ண முடியாது”: லஞ்சம் வாங்கிய அதிமுக நிர்வாகி கைது - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்!

அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின் பெயரில், கார்த்திக் பஞ்சாயத்து தலைவர் சாவித்திரியை அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்றபோது, அவர் அலுவலகத்தில் இல்லாததால் அங்கிருந்து பஞ்சாயத்து தலைவரின் செல் நம்பருக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, துக்க காரியத்துக்கு சென்றுள்ளதாகவும் பஞ்சாயத்து அலுவலகம் வந்தவுடன் கூப்பிடுகிறேன் என்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை ராஜன் அலுவலகத்திற்கு வருமாறு கார்த்திகை அழைத்துள்ளார். ராஜன் அழைப்பின் பேரில் அங்கு சென்ற கார்த்திக் ஊராட்சித் தலைவர் சாவித்திரியுடன் இருந்த அவரது கணவர் ராஜனிடம் 15,000 லஞ்ச பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த கோயம்புத்தூர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அலுவலர்களால் சாவித்திரி மற்றும் ராஜன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பஞ்சாயத்து தலைவர் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர் என்றும், அவரது கணவர் அ.தி.மு.க.வில் பொருப்பில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories