தமிழ்நாடு

“பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு துணை போகலாமா?”: ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு சிலந்தி கேள்வி!

எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் ஒரு இடைச்செருகல்! அண்ணா இந்த இயக்கம் கண்டபோது, அவர் தி.மு.கழகத்திலேயே இல்லை!

“பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு துணை போகலாமா?”: ‘தினத்தந்தி’  நாளேட்டுக்கு சிலந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘தினத்தந்தி' ஏட்டில் ஒரு கட்டுரை 1.10.22ந் வெளிவந்துள்ளது. கட்டுரை எழுதிய நபர் பொருட்படுத் வேண்டியவர் அல்ல; என்றாலும் அந்தக் கட்டுரை வெளியிட்டுள்ள ஏடு, பொருட்படுத்த வேண்டிய ஏடு!

ஏட்டில் சைதை துரைசாமி எழுதியதை கட்டுரை என்று கூற இயலாது; அது ஒரு பொய்களின் கோர்வை! அதனைசென்ற ஆண்டுவெளியிட்ட தினத்தந்தி மீண்டும் அதனை வெளியிட்டுள்ளது! அதிலே தினத்தந்திக்கு என்ன ஆர்வமோ; அக்கறையோ விளங்கவில்லை.

- எம்.ஜி.ஆருக்கே கட்சி துவங்கும் எண்ணத்தை உருவாக்கியது தான்தான் என்று கூறி, எம்.ஜி.ஆரின் சுய அறிவில் தோன்றிய இயக்கமல்ல அ.தி.மு.க. என்பது போன்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார்! அதுகுறித்து நாம் கவலைப்படவில்லை; அது அ.தி.மு.க.வினர் பதிலளிக்க வேண்டிய விவகாரம்!

“பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு துணை போகலாமா?”: ‘தினத்தந்தி’  நாளேட்டுக்கு சிலந்தி கேள்வி!

ஆனால், அதிலே அவர் குறிப்பிட்டுள்ள மற்றொரு தகவல், தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்தி பேரறிஞர் அண்ணாவை முதல் அமைச்சராக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உண்டு; என்று குறிப்பிட்டுள்ளார்! 'தினத்தந்தி' போன்ற வரலாறு உணர்ந்த ஏடு எப்படி இவைகளை வெளியிடுகிறது என்பது விளங்கவில்லை!

எம்.ஜி.ஆரை உயர்த்திக் காட்டட்டும்; அவரது உயர்ந்த குணங்களைப் பட்டியலிடட்டும்; அவைகளிலே நமக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடுமில்லை. ஆனால், அண்ணாவை முதலமைச்சராக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உண்டு என எழுதி அதனை அப்படியே தினத்தந்தி பிரசுரித்திருப்பதும் எத்தகைய நியாயம்?

எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் ஒரு இடைச்செருகல்! அண்ணா இந்த இயக்கம் கண்டபோது, அவர் தி.மு.கழகத்திலேயே இல்லை ! தி.மு.கழகத் தேர்தல் பிரச்சாரங்கள், மாநாடுகளில் பல கலைத்துறை பிரபலங்கள் பங்கேற்பது போல தி.மு.க.வில் சேர்ந்த பிறகு இவரும் பங்கேற்றார்!

நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்றோர் கலந்துகொள்வது போல இவரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். பிரசித்தி பெற்ற நடிகர் என்பதால் அவருடைய கழக ஈடுபாட்டைக் கண்டு மாநாடுகளில் அவர் பேச வரும்போது அதிக ஆரவாரம் எழும்! எம்.ஜி.ஆர்., இயக்கத்தைப் பயன்படுத்தி, கலைத் துறையில் வளர்ந்தார்! - இந்த இயக்கம் கண்ட போராட்டக்களங்களில் பங்கேற்றதில்லை! அண்ணாவே கலைஞர்களுக்கு விதிவிலக்கு அளித்து விடுவார்.

“பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு துணை போகலாமா?”: ‘தினத்தந்தி’  நாளேட்டுக்கு சிலந்தி கேள்வி!

முன்னணியினர், தோழமைக் கட்சியினர், கழகத் தொண்டர்கள் ஈட்டித் தந்த வெற்றி அது! முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் குறிப்பிட்டது போல, சிங்கள் டீ குடித்து விட்டு, பசி நோக்காது கண் துஞ்சாது கருமமே கண்ணாகக் கழகத் தொண்டர்கள் பம்பரமாய் சுழன்று போராடிப் பெற்றுத்தந்த வெற்றி; அத்தகைய அருந்தொண்டர்கள் அரும் பணியால் கிடைத்த வெற்றிதான் அண்ணாவை அரியணையில் ஏற்றியது.

இந்தத் தியாக வரலாற்றை கொச்சைப்படுத் தும் வகையில், எம்.ஜி.ஆர். தான் அண்ணாவை முதலமைச்சர் பதவியில் அமர வைத்தார் என்ற ஒரு அப்பட்டமான வரலாற்றுத் திரிபை ஒரு சந்தர்ப்பவாத அரசியல் பேர்வழி எழுதியதை எப்படி 'தினத்தந்தி' ஆண்டுக்காண்டு திரும்பத் திரும்பப் பிரசுரிக்கிறது என்பது விளங்கவில்லை!

அடுத்த அப்பட்டமான பொய், எம்.ஜி.ஆர். கழகத்தை விட்டு வெளியேற அவர் கூறிய காரணங்கள் எம்.ஜி.ஆர்.தான் கலைஞரை முதலமைச்சராக்கினார் என்பது; இப்படித் தவறான கருத்தை திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்!

அண்ணாவின்மறைவுக்குப்பிறகு கலைஞர் முதல்வராக வேண்டும் என்று பல கழக முன்னணியினரும், சட்டமன்ற உறுப்பினர்களும் விரும்பினர்; அவர்களில் எம்.ஜி.ஆரும் இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை; அதனைக் கலைஞரும் பல முறை சுட்டிக்காட்டியுள்ளார்!

இன்னும் இளைய தலைமுறை உண்மையை விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில விபரங்களை மீண்டும் தருகிறோம்!

“பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு துணை போகலாமா?”: ‘தினத்தந்தி’  நாளேட்டுக்கு சிலந்தி கேள்வி!

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தலைவர் கலைஞர், நாவலர்தான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். நாவலர் ஆற்றல் மிக்கவர் என்றாலும் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து கட்டிக்காத்திட, கலைஞர் போன்ற அறிவாற்றலோடு, செயல் ஆற்றல்மிக்க தலைவர் தேவை என்ற எண்ணத்தைப் பலரும் முன்வைக்க, எம்.ஜி.ஆரும் அதனை ஆதரித்தார். அதனை எம்.ஜி.ஆரே, 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த செங்கற்பட்டு மாவட்டக் கழக மாநாட்டில் உரையாற்றிய போது விளக்கமாக விவரித்துள்ளார்.

இது எம்.ஜி.ஆர். கழகத்தை விட்டுப் பிரிந்த ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன் பேசியது.

“பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு முதலமைச்சர் பொறுப்புக்கு வருவது பற்றி நமது கலைஞர் அவர்கள் என்ன சொன்னார் என்று இதுவரை நான் எந்தமேடையிலும் சொல்லவில்லை. இங்கே அதைச் சொல்லலாம் என்று கருதுகிறேன். முதலமைச்சர் பொறுப்புக்கு நான் வரவிரும்பவில்லை. எனக்கு வேண்டாம் - என்றுதான் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்ல; தம்பி மாறனும், கலைஞரின் துணைவியாரும் இதையே தெரிவித்தனர். இருந்தும் கழகத்தினர் பெரும்பாலோர் விருப்பத்தை ஏற்று நானும் வேண்டுகோள் விடுத்தேன்” என்று செங்கற்பட்டு மாநாட்டில் மட்டுமல்ல; பல நேரங்களில் எம்.ஜி.ஆர். பேசியுள்ளார்.

தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்க எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலும் ஒரு காரணம் என்பதை கலைஞரும் பலமுறை தெரிவித்துள்ளார்!

அன்றைய கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் கலைஞர் முதல்வராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்; எம்.ஜி.ஆரும் அவர்களில் ஒருவர். எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் கழக உறுப்பினர்கள் இருந்து கலைஞரைத் தேர்ந்தெடுத்திருந்தால், எம்.ஜி.ஆர். கழகத்திலிருந்து வெளியேறிய போது அவர்கள் அனைவரும் அவருடன் போய் கலைஞர் ஆட்சியைக் கவிழ்த்திருப்பார்களே; அது நடக்கவில்லை என்பதிலிருந்தே இந்த உண்மை விளங்கும்.

எம்.ஜி.ஆரை மிரட்டி இழுத்து கழக எம்.எல்.ஏ.க்களைப் பிரித்து, கழக ஆட்சியைக்கவிழ்க்க நினைத்து, ஒன்றியத்தை ஆண்ட அரசால் போடப்பட்ட பெரிய சதித்திட்டம் அன்று தகர்ந்து போன ஒன்றே - எம்.ஜி.ஆர். தான் கலைஞரை முதலமைச்சராக்கினார் என்கிற கூற்றைத் தகர்த்துவிடவில்லையா?

“பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு துணை போகலாமா?”: ‘தினத்தந்தி’  நாளேட்டுக்கு சிலந்தி கேள்வி!

இந்த பழைய வரலாறுகளைப் பழம்பெரும் ஏடான தினத்தந்தி அறியாததா? தெரிந்திருந்தும் எப்படிப் பொய்த் தகவல்கள் பொதிந்த ஒரு புனை சுருட்டுக்கு இடம் தந்தது என்பதே நமது கேள்வி!

அடுத்த புனைசுருட்டு: மு.க.முத்துவுக்கு கட்சியில் முக்கியத்துவம் தந்ததால் எம்.ஜி.ஆர். புதுக்கட்சித் துவங்கினார் என்பது. இது எம்.ஜி.ஆரையே கேவலப்படுத்துவதாகும். எம்.ஜி.ஆர் திரையுலகில் சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது

மு.க.முத்து அப்போதுதான் திரையுலகில் கால்பதிக்கிறார். இன்னும் சொல்லப் போனால் மு.க.முத்துவின் எதிர்காலத்துக்கு அவர் விரும்பிய துறைகலைத்துறைக் கழகப் பிரச்சார நாடகங்களில் அவர் ஏற்று நடித்த வேடமே எம்.ஜி.ஆர். வேடம் தான் -.மு.க.முத்துவின் முதல் படத்தின் துவக்க விழாவை எம்.ஜி.ஆரை வைத்து நடத்துமாறு கலைஞர் பணித்தார். அவரது முதல் திரைப்படம் முடிவுற்று முதல் காட்சியே எம்.ஜி.ஆர். முன்னிலையில் சென்னை, தேவி திரையரங்கில் நடத்தப்பட்டது. அங்கே எம்.ஜி.ஆரே மு.க.முத்துவைப் பாராட்டி அவருக்கு கை கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். இவையெல்லாம் நடந்தவை மதுரை கழக ஊர்வலத்தில் மு.க.முத்துவும் பங்கேற்றார்!

கழக ஊர்வலங்களில் திரை நட்சத்திரங்கள் குதிரைகளில் ஏறி வருவது அந்தக் காலக்கட்டங்களில் ஒரு நிகழ்வாக இருந்தது!திராவிடர் கழக ஊர்வலங்களில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அப்படி பல நேரங்களில் ஊர்வலத்தின் முன்னணியில் வந்துள்ளார். கழக உறுப்பினராக அப்போது இருந்த 'விஜயபுரி விரன்' ஆனந்தன் , 'வளையாபதி' முத்துகிருஷ்ணன் போன்றோர் கூட ஓரிரு ஊர்வலங்களில் அப்படி குதிரையில் ஏறிவந்துள்ளனர்.

அப்படித்தான் மதுரை மாநாட்டு ஊர்வலத்தில் மு.க.முத்துவும் பங்கேற்றார்; அது எம்.ஜி.ஆரைப் புண்படுத்தியது என்பது, எம்.ஜி.ஆரை குறைத்து மதிப்பிடுவதாகாதா என்பது கூட தெரியாமல் எழுதப்பட்டுள்ளதே என்பதையாவது 'தினத்தந்தி' உணர்ந்திருக்க வேண்டாமா?

“பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு துணை போகலாமா?”: ‘தினத்தந்தி’  நாளேட்டுக்கு சிலந்தி கேள்வி!
மு.க.முத்து

அன்றைய ஒன்றிய அரசின் அழுத்தத்திற்குப் பயந்து எம்.ஜி.ஆர் தி.மு.க.வை விட்டு விலக காரணங்களைத் தேடி அலைந்து கூறப்பட்ட காரணத்தில் ஒன்றுதான்; எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்பட்டு மு.க.முத்து மன்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது!

இயக்கத் தோழர்கள் சிலர் அப்படி முடிவெடுத்ததற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை ! மு.க.முத்துவின் முதல் படத்துக்கு எம்.ஜி.ஆர். மன்றங்கள் எந்தவித விளம்பரமும் செய்திடக் கூடாது என்ற தகவல்கள் அன்று பறந்தன! ஏன் அப்படிச் சென்றன என்பதனை பலமுறை விளக்கி உள்ளோம். அதனால் ஆத்திரம் அடைந்த சில கழகத் தோழர்கள் மு.க.முத்துவின் பேரில் தனி மன்றங்கள் துவங்க முற்பட்டதும், தலைவர் கலைஞர், "மு.க.முத்து பேரால் ரசிகர் மன்றங்களை கழகத்தினர் துவங்கக் கூடாது; துவங்கி இருந்தாலும் உடனே அதை கலைத்து விட வேண்டும்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்!

எம்.ஜி.ஆர். ஏன் கழகத்தை விட்டு போனார் என்பதற்கு ஆதாரபூர்வ காரணங்கள் உண்டு சுயநலம்; ஒன்றிய அரசின் கிடுக்குப்பிடி, இவைகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர் அவதூறுகளை அள்ளி வீசினார். அன்றைய ஒன்றிய அரசு எவ்வாறெல்லாம் எம்.ஜி.ஆரை மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டது என்பதை ஜூனியர் விகடன் இதழில், போலீஸ் மனிதர்கள் என்ற தொடரில் ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரியே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்! அதையெல்லாம் பலமுறை நாம் விளக்கியாகிவிட்டது! மீண்டும் மீண்டும் பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு 'தினத்தந்தி துணை போகலாமா என்பதே நமது கேள்வி.

Related Stories

Related Stories