தமிழ்நாடு

16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - மகிளா நீதிமன்றம் அதிரடி!

16 வயது சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் 2.50 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - மகிளா நீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வார்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (36). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 2021 ஜுன் மாதம் அதேபகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து சிறுமியின் பெற்றோர் பொன்னமராவதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணேசனை போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா கணேசன் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 6 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளி கணேசன் காவல்துறையினரின் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.

banner

Related Stories

Related Stories