தமிழ்நாடு

மாநில கல்விக் கொள்கை எப்போது வெளியிடப்படும்? .. அமைச்சர் பொன்முடி சொன்ன முக்கிய தகவல்!

தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பது குறித்த எழுத்துப்பூர்வமான கடிதத்தை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

மாநில கல்விக் கொள்கை எப்போது வெளியிடப்படும்? .. அமைச்சர் பொன்முடி சொன்ன முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சியாக இருந்தபோதில் இருந்தே தி.மு.க கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறது.

மேலும் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காகவும் குழு அமைத்து கல்வியாளர்களிடம் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாநில கல்விக் கொள்கை எப்போது வெளியிடப்படும்? .. அமைச்சர் பொன்முடி சொன்ன முக்கிய தகவல்!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நுண்ணுயிரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வெள்ளி விழா விழாவில், அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பது குறித்த எழுத்துப்பூர்வமான கடிதத்தை ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கொடுத்துள்ளது.

மாநில கல்விக் கொள்கை எப்போது வெளியிடப்படும்? .. அமைச்சர் பொன்முடி சொன்ன முக்கிய தகவல்!

ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும். முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories