தமிழ்நாடு

குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!

சென்னையில் குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராஜ். இவரது 4 வயது மகன் கிருஷ்ணா. சம்பவத்தன்று சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்குக் குதிரை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிறுவன் குதிரையின் வாலை பிடித்து விளையாடியுள்ளார்.

குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!

இதையடுத்து குதிரை திடீரென சிறுவனின் மார்பில் எட்டு உதைத்துள்ளது. இதில் சிறுவன் அலறியடித்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அருகே இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!

அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குதிரை எட்டி உதைத்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories