தமிழ்நாடு

’நீ ராசியில்லாதவள்’.. தினமும் வசைபாடிய மாமியார்: விரக்தியில் விபரீத முடிவெடுத்த 4 மாத கர்ப்பிணி!

சென்னையில் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது மாமியாரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

’நீ ராசியில்லாதவள்’.. தினமும் வசைபாடிய மாமியார்: விரக்தியில் விபரீத முடிவெடுத்த 4 மாத கர்ப்பிணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவருக்குக் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரைச் சேர்ந்த குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்துமதி தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது அவரது மாமியார், இந்துமதியிடம் "நீ ராசில்லாதவள், அதிகம் படிக்காதவள் எனவே குறைவாகச் சாப்பிடு" என வசைபாடி அவரை கொடுமைப் படுத்தி வந்துள்ளார். இதனால் 4 மாத கர்ப்பிணியினான இந்துமதி கோவித்துக் கொண்டு தனது தாய்வீட்டிற்கே வந்துள்ளார்.

’நீ ராசியில்லாதவள்’.. தினமும் வசைபாடிய மாமியார்: விரக்தியில் விபரீத முடிவெடுத்த 4 மாத கர்ப்பிணி!

பின்னர் ஒரு மாதம் சென்ற பிறகும் தனது கணவர் வந்து சமாதானம் செய்து அழைத்துச் செல்லாததால் அவர் விரகத்தியில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் கடந்த ஜூலை 22ம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்பு தனது அக்காவிற்கு வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "என்னுடைய இந்த நிலைக்குக் குமரனின் தாய்தான் காரணம்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

’நீ ராசியில்லாதவள்’.. தினமும் வசைபாடிய மாமியார்: விரக்தியில் விபரீத முடிவெடுத்த 4 மாத கர்ப்பிணி!

இவர்கள் திருமணம் ஆகி ஒருவருடமே ஆனதால் அந்த வழக்கு கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டனர். இதையடுத்து கோட்டாட்சியர் விசாரணையில் மாமியார் கொடுமை இருந்தது உறுதியானதை அடுத்து மாமியார் சாந்தியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories