தமிழ்நாடு

’செருப்பு சம்பவம்-மதுரையில் பிரச்னை செய்யவேண்டும்’ : அண்ணாமலை பேசிய ஆடியோ லீக்.. பொதுமக்கள் அதிர்ச்சி !

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் பாஜக வேண்டும் என்று அரசியல் செய்துள்ளது தற்போது வெளிவந்துள்ளது.

’செருப்பு சம்பவம்-மதுரையில் பிரச்னை செய்யவேண்டும்’ :  அண்ணாமலை பேசிய ஆடியோ லீக்.. பொதுமக்கள் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும் இராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செய்திடும் அரசு நிகழ்ச்சியில் கட்சி நிகழ்ச்சியைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? என அமைச்சர் கேள்வி எழுப்பிட, உடனே அங்கிருந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர்.

’செருப்பு சம்பவம்-மதுரையில் பிரச்னை செய்யவேண்டும்’ :  அண்ணாமலை பேசிய ஆடியோ லீக்.. பொதுமக்கள் அதிர்ச்சி !

அமைச்சர் இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க அவரது காரின் மீது செருப்பு வீசியும், கார் கண்ணாடிகளை அடித்தும் தாக்குதலை நடத்தினர். இந்த சம்பவம் நேற்று பெரும் சர்ச்சையான நிலையில், பலரும் இந்த செயலுக்கு பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் கார் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேர்ப்பு வீசிய பாஜக மகளிரணி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்கள் மத்தியிலும் பாஜக மேல் அதிருப்தி பரவியது. மேலும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், இந்த விவாகரத்தில் பாஜக வேண்டும் என்றே அரசியல் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை பாஜக நிர்வாகி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் பேசிய அண்ணாமலை சம்பவம் நடக்கும் இடத்துக்கு 1000 பேரை அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மாஸாக செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கு கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லாத நிலையில், அங்கு வேண்டும் என்றே சென்று அதன் மூலம் அரசியல் செய்ய வேண்டும் என்று கூறுவதும் அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories