தமிழ்நாடு

தொடர் விடுமுறை கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!

தொடர் விடுமுறை காரணமாக கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்!

தொடர் விடுமுறை கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவிழா நாட்கள், நீண்ட அரசு விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் கூடுதல் பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், வருகின்ற 3 - நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை வரும் சூழ்நிலையில், தென் மாவட்டத்திற்கு செல்லும் மக்களுக்கு கூடுதலாக பேருந்து வசதிகளை செய்வதற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

500 முதல் 1000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக இன்று காலையில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர், புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர் விடுமுறை கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!

போக்குவரத்து துறை சார்பில் இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்குவரத்து ஆணையர்,வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழு கூடுதல் கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இது போன்று புகார் வந்த பொழுது நானே நேரடியாக சென்று ஆய்வு செய்தேன்.

அதன் பிறகு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்தால் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இது போன்ற நாட்களில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories