தமிழ்நாடு

"உலகமே வியக்கும் வகையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டை விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"உலகமே வியக்கும் வகையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற

44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில் ஆற்றிய உரை:-

Ancient Tamil poet கணியன் பூங்குன்றனார் in his 2000 years old Sangam Era poem has said “யாதும் ஊரே யாவரும் கேளிர்”! which means, “the whole world is my home and everyone is my kith and kin”. With this spirit of universal brotherhood, Tamil Nadu Government has organised this prestigious event.

(ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த சங்க இலக்கியப் பாடலில் கணியன் பூங்குன்றனார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார். அத்தகைய உலகளாவிய உடன்பிறப்புணர்வோடுதான் தமிழ்நாடு அரசு இந்தப் பெருமைமிகு போட்டியை நடத்தியுள்ளது.)

அனைவரும் மெச்சத்தக்க வகையில் 44-ஆவது பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

கடந்த 28-ஆம் தேதி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இதே நேரு உள்விளையாட்டு அரங்கில் மாபெரும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளோடு செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.

அப்போது நான் பேசும்போது, “இந்திய நாடு இதுவரை அடையாத ஒரு பெரும்புகழை அடையும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டியானது, முதன்முதலாக இந்தியாவில் நடக்கிறது என்பது நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடைபெறுவது அதைவிட மிகப்பெரிய பெருமை!" என்று நான் அன்றைக்கு சொன்னேன்.

"உலகமே வியக்கும் வகையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“இதன்மூலமாக இந்தியாவின் புகழ், தமிழ்நாட்டின் புகழ் உலகம் முழுக்க பரவும், உலக நாடுகளிடையே நம்முடைய செல்வாக்கு உயரும்” என்று குறிப்பிட்டேன். அதனைத்தான் கடந்த இரண்டு வாரங்களாக நாம் பார்த்து வருகிறோம்.

இங்கு வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும், தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்து சமூக ஊடகங்களில் பாராட்டி நன்றி தெரிவிக்கும்போது நான் அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட, நான் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறேன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த திட்டமிட்ட உடனேயே, அதற்காக 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. 18 துணைக் குழுக்களை உருவாக்கியது. நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்தது. உலகமே வியக்கும் அளவுக்கு போட்டியை நடத்தி முடித்துவிட்டோம்.

இதற்குக் காரணமான, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்களையும், இத்துறையைச் சேர்ந்த செயலாளர் அபூர்வா அவர்களையும், அவருக்கு துணை நின்ற அரசு அதிகாரிகளையும், அரசு அலுவலர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். உங்களிடம் தரப்பட்ட பணியை மிகமிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். உங்களது திறமையும், செயலும் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தித் தந்துள்ளது.

"உலகமே வியக்கும் வகையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தொடக்க விழாவில் நான் குறிப்பிட்டதைப்போல, இந்த செஸ் ஒலிம்பியாட் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்லாமல், இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய பண்பாட்டுத் திருவிழாவைப் போல் நடந்துள்ளது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்கள் - பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது நன்றி!

கடந்த இரு வாரங்களாக பல்வேறு நாடுகளில் இருந்தும் செஸ் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உலகின் பழம்பெரும் மரபுச்சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் மாமல்லபுரத்தில் தங்கி ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் நல்வாய்ப்பைப் பெற்றனர்.

My Dear players, I strongly believe that you have really enjoyed your stay and arrangements in Chennai. It was also a great opportunity for us to know and understand your nation, culture and heritage from you.

(என் அன்புக்குரிய வீரர்களே, சென்னையில் உங்களுக்குச் செய்து தரப்பட்ட ஏற்பாடுகளும், இங்கு கழித்த நாட்களும் உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்று உளமார நம்புகிறேன். உங்களது நாடு, பண்பாடு, மரபு குறித்து நாங்கள் அறிந்துகொள்ளவும் இது ஒரு சிறப்பான நல்வாய்ப்பாக அமைந்தது.)

I have no doubt that the players and officials who participated in this prestigious mega chess event will take home not only memories of competitions but also the tradition, culture and taste of Tamil food. I am sure that you will always cherish these memories.

(செஸ் போட்டியில் பங்கேற்ற நினைவுகளுடன், இம்மண்ணின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் உணவின் சுவை ஆகியவற்றையும் நீங்கள் திரும்பிச் செல்கையில் உங்களுடன் கொண்டுசெல்வீர்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.)

தமிழ்நாட்டை விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.

"உலகமே வியக்கும் வகையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

உலக அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும். மாநிலத்திற்கும் பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த ஓராண்டில் 1073 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 26 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில் அதிகமான நிதிக் கொடைகள் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன கருவிகள் மற்றும் பயிற்சி வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம். இதன்படி, 50 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவர்களை மெருகேற்ற 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

இதேபோல் கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், வாள் சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.

ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டு மிக முக்கியப் பங்காற்றுகிறது என்பதை தமிழ்நாடு அரசு நன்கு உணர்ந்துள்ளது.

அதனால்தான் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு, பன்னாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது.

வட சென்னையிலும், கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகாடமிகள் நிறுவப்பட உள்ளன.

"உலகமே வியக்கும் வகையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் “ஏறுதழுவுதலுக்கு” பிரம்மாண்டமாக தனி விளையாட்டுக் களம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அரசு, நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

I am glad to share that We are taking steps to host ‘Chennai Open’ WTA International Championship and also Asian Beach Games in Tamil Nadu.

(சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்தவும் நாங்கள் முனைப்போடு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.)

We will continue our efforts in making Tamil Nadu, a global destination for sports.

(தமிழ்நாட்டை உலகளாவிய விளையாட்டு மையமாக உயர்த்துவதற்கு நாங்கள் தொடர்ந்து முயல்வோம்.)

மேலும், நமது மண்ணின் விளையாட்டுகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

தொடக்க விழாவில் உங்கள் அனைவரின் முன்பும் நிகழ்த்திக் காட்டப்பட்ட சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம்.

தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக சிலம்பாட்டத்தில் ஒளிரும் வீரர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பரிசுத் தொகைகளும் - தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

12 ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான "முதலமைச்சர் கோப்பை"க்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் வழியாக புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு, பல இளைஞர்கள் விளையாட்டைத் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்க உதவும்.

நவீன தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய விளையாட்டு உட்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம்.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அதில் விளையாட்டுத் துறையும் முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

“அதற்குள் முடிந்து விட்டதா?“ என்று ஏங்கும் வகையில் மிகச் சிறப்பாக இந்தப் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றி பெறப் போகும் வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். எதிலும் வெற்றி - தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியமானது. இந்த பங்கேற்பு ஆர்வத்தை எப்போதும் விட்டுவிடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

My Dear players, I appeal to you all to act as the ambassadors of Tamil Nadu.

(எனதருமை வீரர்களே, நீங்கள் அனைவரும் உலக அளவில் தமிழ்நாட்டின் தூதுவர்களாக விளங்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.)

"உலகமே வியக்கும் வகையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

On this occasion, I would like to thank the FIDE for having given us the opportunity of hosting of 44th Chess Olympiad at Chennai.

(இந்த இனிய வேளையில், பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைச் சென்னையில் நடத்தும் வாய்ப்பினை வழங்கியமைக்காக பன்னாட்டு செஸ் கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.)

I would also like to thank the officials of Government of Tamil Nadu who made this mega event happen in a short span of time.

(மிகக் குறுகிய காலத்தில் இத்தகைய மாபெரும் போட்டியை நடத்திக் காட்டக் காரணமாக அமைந்த தமிழ்நாடு அரசைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.)

I also like to thank the A.I.C.F. officials for their contributions in successfully conducting the events.

(மேலும், இப்போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் பெரும் பங்காற்றிய அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் அதிகாரிகளுக்கும் எனது நன்றி.)

I wish the next host, the city of Budapest, all the very best.

(அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த இருக்கும் புதாபெஸ்த் நகருக்கு என் வாழ்த்துகள்!)

Dear International Players, you should all come to Chennai again. Don’t forget that you have a brother here. (என் அன்புக்குரிய பன்னாட்டு வீரர்களே, நீங்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்கு வருகைதர வேண்டும்.)

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories