தமிழ்நாடு

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா.. 5 முக்கிய பாதிப்புகள் என்ன?

ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா.. 5 முக்கிய பாதிப்புகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன. இது முழுக்க முழுக்க மின்சார துறையை தனியார் மயமாக்கும் முயற்சி எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தாக்கல் செய்தார்.

இந்த மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பஞ்சாப், டெல்லி முதல்வர்களும் மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா.. 5 முக்கிய பாதிப்புகள் என்ன?

இதையடுத்து இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்புகிறேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்குப் பார்ப்போம்:-

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் விவசாயிகள், விசைத்தறி பயன்படுத்துவோருக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் திட்டத்தில் பாதிப்பு ஏற்படும். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்திற்கும் பாதிப்பு உள்ளது.

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா.. 5 முக்கிய பாதிப்புகள் என்ன?

அதேபோல் மின் கட்டணங்களை மாநில அரசுகள் முடிவு செய்யாமல் தேசிய ஆணையமே முடிவு செய்யவும் சூழ்நிலை ஏற்படும். மின் விநியோகம் முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.

மேலும் மாநிலத்தின் மின் உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்குப் பங்கிட்டுத் தர மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே மின் உற்பத்தி பங்கிட்டுத் தரப்படும் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories