தமிழ்நாடு

"செஸ் விளையாட்டில் போதிய அளவு வீராங்கணைகள் இல்லை .." - இந்திய பெண்கள் A அணியின் கேப்டன் வேதனை !

செஸ் விளையாட்டில் போதிய அளவு வீராங்கணைகள் இல்லை என்று இந்திய பெண்கள் A அணியின் கேப்டன் கொனேரு ஹம்பி வேதனை தெரிவித்துள்ளார்.

"செஸ் விளையாட்டில் போதிய அளவு வீராங்கணைகள் இல்லை .." - இந்திய பெண்கள் A அணியின் கேப்டன் வேதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி 3 ஓபன் பிரிவுகளிலும், 3 பெண்கள் பிரிவுகளிலும் போட்டியிட்டு வருகின்றன.

இந்த போட்டியில் போட்டியில் நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுகளில், ஜார்ஜியா அணி இந்திய பெண்கள் சி மற்றும் பி அணியை தோற்கடித்தது. தொடர் வெற்றிகள் பெற்று வந்த இந்திய பெண்கள் பி மற்றும் சி அணிகளை தோற்கடித்த ஜார்ஜியா, ஆறாவது சுற்றில் இந்திய பெண்கள் ஏ அணியுடன் மோதியது. இதில் பெண்கள் அணியை தோற்கடித்த ஜார்ஜியா அணிக்கு, இந்திய பெண்கள் ஏ அணி பதிலடி கொடுக்குமா என்ற கேள்வியெழுந்தது.

"செஸ் விளையாட்டில் போதிய அளவு வீராங்கணைகள் இல்லை .." - இந்திய பெண்கள் A அணியின் கேப்டன் வேதனை !

இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதத்தில், இந்திய ஏ அணி வீராங்கனைகள் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜார்ஜியாவை தோற்கடித்தனர். இதையடுத்து போட்டி முடிந்தபிறகு இந்திய பெண்கள் ஏ அணியின் கேப்டன் கொனேரு ஹம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மெடல்களைப் பற்றியும், வெற்றியைப் பற்றியும் எனக்கு இப்போது கவலை இல்லை என்று தெரிவித்தார்.

"செஸ் விளையாட்டில் போதிய அளவு வீராங்கணைகள் இல்லை .." - இந்திய பெண்கள் A அணியின் கேப்டன் வேதனை !

இது குறித்து அவர் பேசியதாவது, "நாங்கள் என்ன செய்கிறோமோ அதை சிறப்பாக செய்துகொண்டே இருப்போம். அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடுகின்றன. எப்போதெல்லாம் வெற்றி தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் யாராவது ஒருவர் முன்வந்து தேவையான வெற்றியை கொடுக்கத் தவறுவதில்லை. செஸ் விளையாட்டில் போதிய அளவு வீராங்கணைகள் இல்லை என்பது உண்மை தான். நாம் இன்னும் பலரை ஊக்குவித்து கொண்டுவரவேண்டும்.

ஆண்களைப் போல பெண்களை எளிதில் ஒரு விளையாட்டில் ஜொலிக்க வைக்க முடியாது. ஆண்கள் சுலபமாக எங்கு வேண்டுமென்றாலும் சென்று விளையாட முடியும். ஆனால், பெண்களுக்கு துணைக்கு பெற்றோரும், சரியான பயிற்சியும் இல்லையென்றால் பெண்கள் பெரியளவில் வர முடியாது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories