தமிழ்நாடு

“வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டி தொடங்குகிறது” : சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் உரை!

அறிவுதான் இறுதிக்காலம் வரைக் காப்பாற்றும் கருவி என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்ன வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டியானது தொடங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டி தொடங்குகிறது” : சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.7.2022) சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை பின்வருமாறும் :- “இந்த விழாவிற்கான அழைப்பிதழுடன் டெல்லி சென்று நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நேரில் அழைக்கலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இடையில் எனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நேரில் செல்ல இயலாத ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிப்பதற்காக மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடர்பு கொண்டார்கள். என்னை நலம் விசாரித்த அவர்களிடத்தில், எனது நிலையை நான் விளக்கினேன். அவர் பெருந்தன்மையோடு சொன்னார் 'நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் - நான் நிச்சயம் கலந்து கொள்வேன் - இந்த விழாவானது இந்தியாவுக்கே பெருமை தரக்கூடிய விழா' என்று பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வகையில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இங்கே வருகை புரிந்திருக்கிறார்கள்.

“வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டி தொடங்குகிறது” : சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் உரை!

Your presence has enhanced the magnitude of this function and I thank you for making it.

I convey my heart-felt thanks to Hon’ble Union Sports Minister Anurag Thakur and other officials for providing all help and support to conduct this event in Tamil Nadu.

44-ஆவது பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டி என்பது ரஷ்ய நாட்டில்தான் நடப்பதாக முதலில் சொல்லப்பட்டது. கொரோனா மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக, ரஷ்யாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

வேறு எந்த நாட்டில் நடைபெறலாம் என்பதற்கான ஆலோசனைகள் நடந்ததை அறிந்து, இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால், தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை நாம் பெற வேண்டும் என்று அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டேன்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இது பற்றி நமக்கு தகவல்கள் கிடைத்தன. கடந்த மார்ச் 16-ஆம் நாள் இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக 18 துணைக் குழுக்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியது.

“வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டி தொடங்குகிறது” : சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் உரை!

இது போன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு குறைந்தது 18 மாதங்களாகும் என்பார்கள். ஆனால் நான் பெருமையோடு சொல்கிறேன், நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்திருக்கிறது. இதற்குக் காரணமான மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்களையும், -விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும், இதற்குத் துணைநின்ற அனைத்துத் துறை அதிகாரிகளையும் நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

44-ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி என்பது உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இன்று துவங்கியுள்ளது. இப்போட்டியின் மூலமாக தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை மட்டுமல்ல - சுற்றுலாத் துறையும் - தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய இருக்கிறது. இன்னும் சொன்னால், தமிழ்நாட்டினுடைய மதிப்பும், தமிழ்நாடு அரசினுடைய மதிப்பும் பெருமளவு இன்று முதல் மேலும் மேலும் உயர்கிறது. இந்த உயர்வு என்பது மிகச் சாதாரணமாகக் கிடைத்து விடுவது அல்ல. சரியான திட்டமிடல், கடின உழைப்பு, அதனுடைய விளைவே இந்த உயர்வு.

“வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டி தொடங்குகிறது” : சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் உரை!

இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாகவும், ஆசியா கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியத் துணைக்கண்டத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டுதான், இன்று உலகம் முழுக்கவும் செஸ் என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில சில மாறுதல்களுடன் உலகின் பல்வேறு நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது.

தொடக்கவிழா இங்கு நடைபெற்றாலும், போட்டிகள் முழுமையாக, இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது.

மாமல்லபுரம் இந்தியக் கட்டடக்கலையின் அருங்காட்சியகம். அதற்குப் பக்கத்தில்தான் சதுரங்கப்பட்டினம் என்ற கடலோரப் பகுதி இருக்கிறது. சென்னைப் பட்டனத்தை மெட்ராஸ் என்று அழைத்ததைப் போல சதுரங்கப்பட்டனத்தை சத்ராஸ் என்று அழைத்தார்கள். மன்னர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற ஊர் அந்த ஊர். இன்றைக்கு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அந்த ஊர் கோட்டை இருக்கிறது. அத்தகைய சதுரங்கப்பட்டனத்துக்கு அருகில்தான் உலகப்புகழ் பெற்ற சதுரங்கப் போட்டி நடக்க இருக்கிறது.

1961-ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாகப் புகழ் பெற்ற மானுவல் ஆரோன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை ஆகும். இந்தியாவில் செஸ் விளையாட்டை முன்னோக்கி நகர்த்தி, பல்வேறு திறமையாளர்களுக்கு ஊக்கமளித்ததும் மானுவல் ஆரோன்தான்.

“வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டி தொடங்குகிறது” : சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் உரை!

1972-ஆம் ஆண்டே சென்னையில் இருந்த சோவியத் கலாச்சார மையத்தில் செஸ் க்ளப் ஒன்றினை உருவாக்கியவர் ஆரோன். செஸ் விளையாட்டில் உலகப்புகழ் பெற்ற வீரர்களை உருவாக்கிய சோவியத் நாடே, ஆரோனின் ஆலோசனையை பெற்றுத்தான் செயல்பட்டது. தமிழ்நாடு செஸ் அசோசியேஷனை உருவாக்கியவரும் இவர்தான்.

உலகக் கிராண்ட் மாஸ்டராகப் புகழ் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை.

1988-ஆம் ஆண்டு தனது 19வது வயதில் உலகப் புகழைப் பெற்றவர் ஆனந்த் அவர்கள். இன்று வரை உலக சதுரங்க ஆட்டத்தில் வலிமையான வீரராக அவர் விளங்கிக் கொண்டு இருக்கிறார்.

2001-ஆம் ஆண்டு பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றவர் விஜயலட்சுமி சுப்பராமன்.

2018-ஆம் ஆண்டு மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தார் பிரக்ஞானந்தா.

Out of 73 Grand Masters in India, 26 are from Tamil Nadu. It means 36% of Indian Grand Masters are from Tamil Nadu. This is a game of intelligence and Strategy. And I am proud that TN excels in this game. Chennai can be rightly called the Chess Capital of India. The Government of Tamil Nadu immediately allotted 102 crore rupees to host this Chess Olympiad event. Also, we are more than happy to bear all the expenses of our Indian players.

பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது.

We also designed the mascot as a knight dressed in the traditional Tamil attire, saying Vanakkam. We named him Thambi. The term Thambi is a symbol of brotherhood. To indicate that we are all one fraternity.

The iconic mass leader of Tamil Nadu “Perarignar Anna” used to fondly call everyone as ‘Thambi”. This mascot’s name is in honour of such an endearing term.

அதற்கான சிறப்புமிகுந்த விளம்பரப் பாடலை தமிழ்நாட்டில் பிறந்து, உலகளாவிய இசை உலகத்தின் புகழை தனது இளமைக் காலத்திலேயே பெற்ற என்னுடைய அருமைச் சகோதரர் திரு. ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசை அமைத்துக் கொடுத்தார்.

இப்படி செஸ் ஒலிம்பியாட் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்ல, விளையாட்டு விழாவாக மட்டுமல்ல - இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய பண்பாட்டுத் திருவிழாவைப் போல் ஒரு சகோதரத்துவ மனப்பான்மையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய விழாவைத் தொடங்கி வைக்க வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து நீங்கள் தமிழகத்துக்குத் தாருங்கள் என்றும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஓர் அரசன்

ஓர் அரசி

இரு அமைச்சர்கள்,

இரு குதிரைகள்,

இரு கோட்டைகள்

எட்டுச் சிப்பாய்கள் என கருப்பு - வெள்ளை ராணுவ மைதானமாகவே காட்சி அளிப்பது சதுரங்கம்.

கீழடியைப் பற்றி நான் அதிகம் விளக்க வேண்டியது இல்லை. பல்லாயிரம் ஆண்டுப் பழமையைக் கொண்ட தமிழினம் வாழ்ந்த அடையாளம் கொண்ட பகுதியாக கீழடி நமக்கு வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

கீழடியில் ஏராளமான பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. தந்தத்தினால் ஆன காய்கள் இவை. இவ்வகையான பொருட்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சுடுமண்ணால் சுடப்பட்டு பெரும்பாலும் கருப்பு நிறம் கொண்டவையாக உள்ளன. குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில்லுகள் கருப்பு சிவப்பு கொண்டவையாக உள்ளன.

போரில் யானையும் உண்டு, குதிரையும் உண்டு.

கோட்டையும் உண்டு வீரர்களும் உண்டு.

அரசனும் உண்டு, அரசியும் உண்டு.

போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது.

'ஆனைக்குப்பு' என்று சதுரங்க விளையாட்டுக்கு தமிழ் இலக்கியத்தில் பெயர் இருந்துள்ளது. 'ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலவே' என்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது.

அந்தளவுக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்பு, சதுரங்க விளையாட்டுக்கும் தமிழ்நாட்டும் உண்டு. அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு இது. அத்தகைய உலகளாவிய அறிவு விளையாட்டு இன்று தொடங்குகிறது.

அறிவுதான் இறுதிக்காலம் வரைக் காப்பாற்றும் கருவி என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்ன வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டியானது தொடங்குகிறது.

ஒரு காலத்தில், அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. இன்று அது மக்கள் அனைவரின் விளையாட்டாக மாறிவிட்டது. மூளை சார்ந்த போர்க்கலையாகச் சொல்லப்படும் விளையாட்டு இது.

அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல, அறிவை நம்பிய விளையாட்டு!

இந்த விளையாட்டினை தமிழகத்தில், இந்தியாவில், மேலும் பரவச்செய்ய, இந்தப் போட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்வியோடு விளையாட்டையும் கலந்து அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அறிவுத்திறனைப் பெருக்கும் சதுரங்கத்தின் பங்கும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இந்த ஒலிம்பியாட் ஒரு சிறப்பான துவக்கப்புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள்! வணக்கங்கள்!

I welcome each and every player from around the world to Tamil Nadu. Thank you all for coming. It is indeed an honour for Tamil Nadu and India to host you all.

I once again thank our Hon’ble Prime Minister and with this few words, I conclude my speech.

நன்றி! வணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories