தமிழ்நாடு

Doctor to IPS ! தமிழ்நாட்டின் புதிய உளவுத்துறை IG செந்தில்வேலன் IPS யார்?

தமிழக உளவுத்துறை ஐஜி.யாக பதவியேற்றுள்ள செந்தில்வேலன் IPS கடந்த வந்த பாதையை இந்த கட்டுரை விவரிக்கிறது.

Doctor to IPS ! தமிழ்நாட்டின் புதிய உளவுத்துறை IG செந்தில்வேலன் IPS யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த வரிசையில் தற்போது உளவுத்துறை ஐஜி.யாக இருந்த ஆசியம்மாள் நீக்கப்பட்டு அவரின் இடத்துக்கு செந்தில்வேலன் என்பவர் உளவுத்துறை ஐஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐ.ஏ.எஸ் செந்தில்வேலன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரையை பூர்விகமாக கொண்ட இவரின் குடும்பத்தின் இவரின் பாட்டனார், மற்றும் தாத்தா ஆகியோர் காவல்துறையில் இருந்துள்ளனர்.

இதன் காரணமாக வீட்டின் கடைசி பிள்ளையாக இருந்த செந்தில்வேலனுக்கும் போலிஸ் ஆசை தொற்றியுள்ளது. இவரின் அப்பா மக்கள் தொடர்ப்பு அதிகாரி, அம்மா ஆசிரியராகவும் பணிபுரிந்த நிலையில், அப்பாவின் விருப்பப்படி செந்தில்வேலன் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்று அரசு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

Doctor to IPS ! தமிழ்நாட்டின் புதிய உளவுத்துறை IG செந்தில்வேலன் IPS யார்?

எனினும் காவல்துறை ஆசை விடாததால் வேலை பார்த்துக்கொண்டே UPSC படித்த இவர் முதல் முறையிலேயே இந்திய அளவில் 86 வது இடம் பிடித்தார். IAS -ஆக வாய்ப்பிருந்த நிலையிலும் தனது கனவான IPS வேலையையே தேர்ந்தெடுத்தார்.

IPS பயிற்சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், காஷ்மீர், ராஜஸ்தானில் பயிற்சியினை முடித்து ராமநாதபுறம் கமுதி துணை கண்காணிப்பாளராக பதவியேற்றார். அந்த பதவியில் சிறப்பாக செயல்பட்டதால், சிதம்பரம் ASP, ராமநாதபுறம் SP , தஞ்சாவூர் SP, அடையாறு துணை ஆணையர்,ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை SP என தொடர்ச்சியாக பதவி உயர்வு பெற்றார்.

Doctor to IPS ! தமிழ்நாட்டின் புதிய உளவுத்துறை IG செந்தில்வேலன் IPS யார்?

இந்த தருணத்தில்தான் இம்மானுவேல் சேகரர் பிறந்தநாளின்போது வெடித்த பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிறப்பான கையாண்டதாக பல்வேறு தரப்பினரால் புகழப்பட்டார். பின்னர் ஒன்றிய அரசு பணிக்கு அனுப்பப்பட்ட இவர், கடந்த 2018ம் ஆண்டு அயல்பணி DIG-யாக பதவியேற்றார்.

பின்னர் உளவுத்துறையில், இந்திய தூதரக பணி பாங்காக் என்ற பதவியில் இருந்த இவர், ஒன்றிய அரசுக்கு பல்வேறு உளவுதகவல்களை அளித்ததாக பாராட்டப்பட்டார். பின்னர் தமிழக பணிக்கு அழைக்கப்பட்ட இவர் தற்போது உளவுத்துறை ஐஜி.யாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories