தமிழ்நாடு

கழிவு நீர் கால்வாயில் வந்த ரூ.2000 நோட்டுகள்..திரண்ட பொதுமக்கள்..எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கழிவு நீர் கால்வாயில் 2000, 200, 100,50 ரூபாய் நோட்டுகள் வரிசையாக மிதந்து வந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

கழிவு நீர் கால்வாயில் வந்த ரூ.2000  நோட்டுகள்..திரண்ட பொதுமக்கள்..எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சிவன் கோவில் தேரடி வீதி பகுதியில் கழிவு நீர் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் திடீரென 2000, 200, 100,50 ரூபாய் நோட்டுகள் வரிசையாக மிதந்து வந்துள்ளன. இதைக் கண்ட ஒருவர் மற்றொருவருக்கு கூற என சில நிமிடங்களில் இந்த சம்பவம் அந்த பகுதி முழுக்க தெரியவந்துள்ளது.

உடனே அந்த கழிவு நீர் ஓடை அருகில் வந்த அந்த பகுதி மக்கள் இந்த நிகழ்வை ஆச்சரியமாக பார்த்துச்சென்றனர். அதில் பலர் இந்த பணத்தை எப்படி எடுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தனர்.

கழிவு நீர் கால்வாயில் வந்த ரூ.2000  நோட்டுகள்..திரண்ட பொதுமக்கள்..எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கழிவுநீரில் கையை விட்டு அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துள்ளார். ஒவ்வொரு நோட்டாக எடுத்துப்பார்த்த அவரின் மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்துள்ளது.

அப்போதுதான் அந்த பகுதி மக்களுக்கு அது நிஜமான நோட்டுகள் இல்லை என்பதும், குழந்தைகள் விளையாடும் விளையாட்டு நோட்டுகள் என்பதும் தெரியவந்தது. இதை அறிந்த பொதுமக்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories