
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பேருந்து நிலையத்தில் ராஜேஷ் மற்றும் சபீக் ஆகியோர் டீ கடை நடத்தி வருகின்றனர். இவர்களது டீ கடை இரவு முழுவதும் செயல்பட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் டீ வியாபாரம் நடந்து கொண்டு இருந்த போது, கடையிலிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டீ மாஸ்டர் உட்பட கடையிலிருந்த உடனடியாக வெளியேறியுள்ளார்.

இதையடுத்து தீ பற்றி எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் டீ குடிக்க வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் காயமடைந்த அனைவரும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வடசேரி போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் உயர் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார்.
இது சம்பவம் பற்றி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.






