தமிழ்நாடு

நானும் MGR ரசிகன்தான்.. கடிதம் எழுதிய ஆட்டோ ஓட்டுநருக்கு போனில் நன்றி சொன்ன முதல்வர்: நெகிழ்ச்சி சம்பவம்!

முதலமைச்சருக்கு வாழ்த்து கூறிய ஆட்டோ ஓட்டுநரிடம் தொலைபேசியில் நன்றி கூறிய முதலமைச்சர்.

நானும் MGR ரசிகன்தான்.. கடிதம் எழுதிய ஆட்டோ ஓட்டுநருக்கு போனில் நன்றி சொன்ன முதல்வர்: நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முதலமைச்சர் முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அவரைத் தொலைபேசியில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேலூர் மாநகர் சேண்பாக்கம் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அவர், முதலமைச்சர் வேலூர் வருகையின் போது ஆடம்பரமில்லாமல் வந்ததாகவும், போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றும், அதனால் தாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டியதாவும், கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும் பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முதலமைச்சர் முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் பன்னீர் செல்வம் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பன்னீர் செல்வத்தை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார்.

சாமானிய மனிதனின் கடிதத்திற்கும் மதிப்பளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories