தமிழ்நாடு

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்.. குலசேகரப்பட்டினத்தில் பணிகள் தொடங்கியது - முழு விபரம் இதோ!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கும் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது.

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்.. குலசேகரப்பட்டினத்தில் பணிகள் தொடங்கியது - முழு விபரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, குலசேகரபட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான அமராபுரம், கூடல்நகர், அழகப்புரம், மாதவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்வான இடங்களில், கடந்த 2019 ஆம் வருடம் முதல் குலசேகரபட்டினம் அமராபுரம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்டமாக நில அளவீடு செய்யும் பணி அரசு அதிகாரிகள் மூலம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்.. குலசேகரப்பட்டினத்தில் பணிகள் தொடங்கியது - முழு விபரம் இதோ!

இதனை தொடர்ந்து, தற்போது குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு குலசேகர பட்டினத்தை சுற்றியுள்ள கையகப்படுத்தப்பட்ட இடங்களான கூடல்நகர், எள்ளு விளை, மாதவன் குறிச்சி அழகப்பாபுரம், அமராபுரம் போன்ற கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான ஆள் உயர கல் நிறுத்தப்பட்டு கட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில அளவீடு செய்யும் முதற்கட்ட பணியானது முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆள் உயரகல் நிறுத்தப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கும் கட்டுமான பணியானது தற்போது எள்ளுவிளை கிராம பகுதியில் கட்டுமான பணி தொழிலாளர் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடங்கப்பட்ட இப்பணியானது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இடங்களிலும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. தடுப்பு வேலிகள் அமைக்கும் கட்டுமான பணியானது இன்னும் ஆறு மாதங்களில் முடிவடையும் என்பது எதிர்பார்க்க படுகிறது.

banner

Related Stories

Related Stories