தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. பதுங்கி இருந்து மடக்கி பிடித்த போலிஸ் - சிக்கியது எப்படி?

மும்பையில் இருந்து போதைக்காக மொத்தமாக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்த மூன்று பேரை பல்லாவரம் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. பதுங்கி இருந்து மடக்கி பிடித்த போலிஸ் - சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தாம்பரம், பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் வலி நிவாரண போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பதாக போதை தடுப்பு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தனிபடை அமைக்கபட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பல்லாவரத்தில் பஜார் அருகே போலிஸாரை கண்டதும் மூன்று நபர்கள் தப்ப முயன்றுள்ளனர் அவர்களை மடக்கி பிடித்த போலிசார் நடத்திய விசாரனையில் அவர்கள் பைசல் (24), ஜகருல்லா (27), உதயசீலன் (28) என்பதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்றது தெரிய வந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. பதுங்கி இருந்து மடக்கி பிடித்த போலிஸ் - சிக்கியது எப்படி?

அவர்களிடமிருந்து 600 வலி நிவாரண மாத்திரைகள் 100 ஊசிகளை பறிமுதல் செய்த போலிஸார் மீண்டும் நடத்திய கிடுக்குபுடி விசாரனையில் மும்பையில் இருந்து மாத்திரைகளை மொத்தமாக வாங்கிய வந்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்யபட்டதை ஒப்புகொண்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலிஸார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories