தமிழ்நாடு

விமானம் கிளம்பிய அடுத்த நோடி.. பீகார் பயணி பரிதாப பலி.. சென்னை விமான நிலையத்தில் நடந்த பகீர் சம்பவம்!

சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பயணித்த பீகார் மாநிலத்தை சோ்ந்த பயணி திடீா் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் கிளம்பிய அடுத்த நோடி.. பீகார் பயணி பரிதாப பலி.. சென்னை விமான நிலையத்தில் நடந்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு நகரத்திச் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த விமானத்தில் 137 பயணிகள் பயணித்தனா். அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. விமானம் ஓடுபாதையில் ஓடத் தயாரானது.

அந்த நேரத்தில் அந்த விமானத்தில் இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங் (47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார். உடனடியாக விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனா்.

விமானம் கிளம்பிய அடுத்த நோடி.. பீகார் பயணி பரிதாப பலி.. சென்னை விமான நிலையத்தில் நடந்த பகீர் சம்பவம்!

இதையடுத்து ஓடுபாதையில் ஓடவேண்டிய விமானத்தை ஓடாமல் விமானி நிறுத்தி வைத்தார். விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தின் கதவுகள் திறக்கட்டு, மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து அவரை விமானத்தை விட்டு கீழே இறங்கி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜுவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விமானம் கிளம்பிய அடுத்த நோடி.. பீகார் பயணி பரிதாப பலி.. சென்னை விமான நிலையத்தில் நடந்த பகீர் சம்பவம்!

இது சம்பந்தமாக மருத்துவமனையிலிருந்து சென்னை விமான நிலைய போலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலைய போலிஸார் மருத்துவமனை சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

அதோடு பீஹாா் மாநிலத்தில் உள்ள திலீப்குமாா் சிங் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை ஒரு மணி நேரம் தாமதமாக 136 பயணிகளுடன் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றது.

banner

Related Stories

Related Stories