தமிழ்நாடு

“ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விரைவில் அவசரச் சட்டம்” : விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் - முதல்வர் அதிரடி !

ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து ஆலோசனைக்கப்படும்.

“ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விரைவில் அவசரச் சட்டம்” : விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் - முதல்வர் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்ததுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.

“ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விரைவில் அவசரச் சட்டம்” : விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் - முதல்வர் அதிரடி !

இதனால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன.

இதனையடுத்து, கடந்த 10-6-2022 அன்று ஓய்வுபெற்ற மாண்பமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட முதலமைச்சர் ஆணையிட்டார்கள்.

“ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விரைவில் அவசரச் சட்டம்” : விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் - முதல்வர் அதிரடி !

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் திரு.சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் திருமதி லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, இ.கா.ப. ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அளித்தது. இந்த அறிக்கைமீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று (27-6-2022) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories