தமிழ்நாடு

குணச்சித்திர நடிகர் 'பூ ராமு' காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்!

சிறந்த குணச்சித்திர நடிகர் 'பூ ராமு' உடல் நல குறைவால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குணச்சித்திர நடிகர்  'பூ ராமு' காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் 'பூ ராமு'. இவர் முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினராவும் இருந்து வந்தார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின் நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், கர்ணன், சூரரைப் போற்று போன்ற படங்களில் நடித்துள்ளார்.

குணச்சித்திர நடிகர்  'பூ ராமு' காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்!

இவர் இதய பிரச்னை காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories