தமிழ்நாடு

45 ஆண்டுகளாக உணவில்லாமல் வாழும் நபர்! எந்த ஊர் என்று தெரிந்தால் SHOCK ஆகிடுவீங்க!

புதுக்கோட்டை அருகே 45 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் வாழும் முதியவரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

45 ஆண்டுகளாக உணவில்லாமல் வாழும் நபர்! எந்த ஊர் என்று தெரிந்தால் SHOCK ஆகிடுவீங்க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லு (80). இவருக்கு 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி அழகி குழந்தைகள் சிறு வயதாக, இருக்கும்போதே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

மனைவி இறந்த பின்னர் நல்லு குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக உணவு உண்பதை குறைந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணவு உண்பதையே நிறுத்தி கடந்த 45 ஆண்டுகளாகதண்ணீர் மற்றும் காபி ஆகியவை மட்டுமே அவ்வப்போது குடித்து வந்துள்ளார்.

45 ஆண்டுகளாக உணவில்லாமல் வாழும் நபர்! எந்த ஊர் என்று தெரிந்தால் SHOCK ஆகிடுவீங்க!

தந்தையின் நிலையை கண்ட அவரது பிள்ளைகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் குளுக்கோஸ் சத்து மாத்திரைகளை பரிந்துரை செய்த நிலையில் சத்து மாத்திரைகளை மட்டுமே உண்டு சாப்பிடாமல் இருந்து வருகிறார்.

மேலும் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு எந்த உடல்நிலை கோளாறும் இல்லை என தெரிவித்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

45 ஆண்டுகளாக உணவில்லாமல் வாழும் நபர்! எந்த ஊர் என்று தெரிந்தால் SHOCK ஆகிடுவீங்க!

இந்த நிலையில் தந்தை குறித்து பேசியுள்ள அவரது மகன்கள், அவர் உணவு சாப்பிட்டு பார்த்ததே இல்லை என்றும், தனது தந்தை உணவருந்துவதை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

45 ஆண்டுகளான உணவு அருந்தாமல் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வரும் இவரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories