தமிழ்நாடு

ஓடுபாதையில் திடீா் இயந்திரக்கோளாறு.. உயிா் தப்பிய 164 பயணிகள் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு செல்லும் தாய் ஏா்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் ஓடியபோது திடீா் இயந்திரக்கோளாறு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடுபாதையில் திடீா் இயந்திரக்கோளாறு.. உயிா் தப்பிய 164 பயணிகள் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக, நள்ளிரவு 12 மணிக்கு பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரும். அதே விமானம் மீண்டும் அதிகாலை 1:10 மணிக்கு சென்னையிலிருந்து பேங்காக் புறப்பட்டுச் செல்லும். அதேபோல் இன்று அதிகாலை 1:10 மணிக்கு பேங்காக் புறப்பட்டு செல்ல வேண்டிய தாய் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று வழக்கத்தை விட 30 நிமிடம் முன்னதாக இரவு 11:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

அந்த விமானத்தில் சென்னையிலிருந்து பேங்காக் செல்வதற்கு 158 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் இரவு 10:30 மணிக்கு முன்னதாகவே சென்னை சா்வதேச விமானநிலையம் வந்து, போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனா்.

அதன்படி பயணிகள் 158 பேரும் விமானத்தில் ஏறி விட்டனர். அதேபோல் விமான ஊழியர்கள் 8 பேரும் விமானத்தில் ஏறிக்கொண்டனா். 164 பேருடன் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்கியது.

அந்த நேரத்தில் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறக்க தொடங்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர தகவல் கொடுத்தார்.

இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுது பார்க்கும் பணியில் விமானப் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

விமானம் காலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர். அதன் பின்பு 8:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர். ஆனால் விமானம் இயந்திரக் கோளாறு சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 158 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விமானம் பழுது பார்த்து புறப்பட்டு மதியத்திற்கு மேல் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்து அவசர நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 164 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories