தமிழ்நாடு

குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர்கள்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்!

தூத்துக்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் குடிபோதையில் படுத்து தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதி 2 பேர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர்கள்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, திரு.வி.க நகரை சேர்ந்த மாரிமுத்து, நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஜெபசிங் ஆகிய 3 பேரும் தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரும் மீளவிட்டான் இருந்து தூத்துக்குடி துறைமுகம் செல்லும் மூன்றாம் மைல் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்றிரவு அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இவர்களுக்கு போதை உச்சத்தில் ஏறவே அங்கேயே படுத்து தூங்கி உள்ளனர். இதில் மூன்றாம் மைல் மாரிமுத்துவும் திரு.வி.க நகர் மாரிமுத்துவும் தண்டவாளத்தில் மீது படுத்து உள்ளனர். ஜெபசிங் தண்டவாளத்தின் அருகில் படுத்து வழங்கியுள்ளார் இந்த நிலையில்

இன்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசம் நூல் வித் ரயில் நிலையத்திற்கு சென்ற சரக்கு ரயில் இரண்டு மாரிமுத்து மீதும் ரயில் ஏறி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே, இரண்டு மாரிமுத்துவும் பலியாகியுள்ளனர். மேலும் தண்டவாளத்தின் அருகில் படுத்திருந்த ஜெபசிங் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பலியான 2 மாரிமுத்துவின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயத்துடன் இருந்த ஜெபசிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் இந்த மூன்று பேர் மீது குற்ற வழக்குகள் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் காவல் நிலையங்கள் இருப்பது தெரியவந்துள்ளது மேலும் குண்டர் சட்டத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைக்கு சென்று வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது

banner

Related Stories

Related Stories