தமிழ்நாடு

“மடாதிபதிகள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் வரம்புக்குள் பேச வேண்டும்” : திருநாவுக்கரசர் MP பேச்சு !

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையா? அவர் அரசியல் செய்கிறார்; அவர் அரசியல் செய்வதற்காக புழுதி வாரித் தூற்றி வருகிறார் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

“மடாதிபதிகள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் வரம்புக்குள் பேச வேண்டும்” : திருநாவுக்கரசர் MP பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மடாதிபதிகளாக இருக்கட்டும் மாதங்களாக இருக்கட்டும் அறநிலையத்துறை அதிகாரிகளாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அவர்கள் வரம்புக்குள் பேச வேண்டும், பிரிவினையை தூண்டும் விதத்திலையோ அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலையோ பேசக்கூடாது என புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி. செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது பேசிய அவர், அறநிலைதுறையில் உள்ள அதிகாரிகளாக இருக்கட்டும், மடாதிபதிகள் ஆதீனங்கள் என அவரவர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளது. அதேபோல் அரசுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உரிமை உள்ளது. அதனால் அவர் அவர்கள் அளவோடு இருக்க வேண்டும்.

மடாதிபதிகள் வாயை திறக்கக் கூடாது, பேசக்கூடாது என்பது அல்ல. கருத்து சொல்லலாம், பேசலாம். மடாதிபதியோ தேவாலயம் பள்ளிவாசல் இந்து மதக் கோயில்கள் சம்பந்தப்பட்டவர்கள் மதத் தலைவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர்கள் பாராட்டி கொள்ளலாம். அவர்கள் மதத்தை புகழ்ந்து கொள்ளலாம். ஆனால் பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்திலையோ மற்ற நம்பிக்கையை உடைக்கும் விதத்திலோ அதன் மூலமாக மத பிரச்சனையோ மக்கள் பிரச்சினையையோ பிரிவினையை தூண்டும் படி பேசக்கூடாது. மடாதிபதிகள் அமைதியை நிலைநாட்ட கூடியவர்கள். அவர்அவர்கள் அவர்களது வரம்புக்குள் பேச வேண்டும்.

மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி எந்த ஆதினமாக இருந்தாலும் சரி அவர்களை மதிக்கிறோம். அரசும் அவர்களை மதிக்கும். மடாதிபதிகள் பேசவே கூடாது என்பதல்ல, அவர்களது பேச்சு பிரிவினையை தூண்டும் விதத்திலையோ மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி புண்படுத்தும் விதத்திலையோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் படி இருக்கக் கூடாது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையா? அவர் சொல்வது வேத வாக்கா? அவர் அரசியல் செய்கிறார் அவர் அரசியல் செய்வதற்காக புழுதி வாரித் தூற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories