தமிழ்நாடு

அக்கா திட்டியதால் ஆத்திரம்.. குடிபோதையில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீதம் - சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்!

சென்னை ஆதம்பாக்கம் அருகே புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்கா திட்டியதால் ஆத்திரம்.. குடிபோதையில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீதம் - சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் கால்டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான விஜயனுக்கு கடந்த மே மாதம் முதல் வாரத்தில் அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் தந்தை இழந்த நிலையில், அம்மா, மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜயனின் அம்மா வீட்டுவேலைக்குச் சென்றுள்ள நிலையில் மனைவி அனிதா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது வேலைக்குச் சென்ற விஜயன் குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனிதா, விஜயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அனிதாவை விஜயன் அடித்துள்ளார்.

இதனால் அனிதா, விஜயனின் அக்கா கீதா என்பவர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்குச் சென்ற அனிதா, நடந்தவற்றைக் கூறி அழுது புலம்பியுள்ளார். பின்னர் அங்கேயே இருந்த அனிதாவை மீண்டும் அழைத்து வருவதற்காக அக்கா கீதா வீட்டிற்கு விஜயன் சென்றுள்ளார்.

குடிபோதையில் இருந்த விஜயனை அக்கா கீதா கடுமையாக கண்டித்துள்ளார். குடிவிட்டு வந்தால் வீட்டிற்கு வரதே என்றும் பேசக்கூடாது என்றும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தோடு, கீதா வீட்டில் இருந்து விஜயன் கிளம்பியுள்ளார்.

இந்நிலையில் கோபத்தோடு சென்ற கணவரை பார்ப்பதற்காக அனிதா மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள படுக்கறையில் தூக்கிட்டு விஜயன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தூக்கில் தொங்கிய விஜயனை அக்கம்பக்கத்தினர் உதவியோடு அனிதா மீட்டுள்ளார்.

இதனிடையே விபரம் அறிந்து வீட்டிற்கு வந்த அக்காள் கீதா மன்னிப்புக்கேட்டுவிட்டு தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது மயங்கிய நிலையில் விஜயன் கண்களை மூடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விஜயனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயனை பரிசோதித்ததில், அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories